772. | தொறுவில் ஆன்இள ஏறு | | துண்ணென இடிகுரல் வெருவிச் | | செறுவில் வாளைகள் ஓடச் | | செங்கயல் பங்கயத் தொதுங்கக் | | கறுவி லாமனத் தார்கள் | | காண்தகு வாஞ்சியத் தடிகள் | | மறுவி லாதவெண் ணீறு | | பூசுதல் மன்னும்ஒன் றுடைத்தே. | | 2 |
2. பொ-ரை: பசுக் கூட்டத்துள், இளைய ஆனேறு, கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி, வயல்களில் உள்ள வாளைமீன்கள் ஓடவும், செவ்வரிகளையுடைய கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும், பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல், சிறந்ததொரு கருத்தை உடையது. கு-ரை: அக் கருத்தாவது, உலகிற்குப் பற்றுக்கோடு தாமே என்பது. இதனை, "வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாய்இலர்"
(தி. 3 ப. 54 பா. 3) என்ற திருப்பாசுரத்திற்கு, "வெந்த சாம்பல் விரைஎன் பதுதம | தந்த மில்லொளி யல்லா வொளியெலாம் | வந்து வெந்தற மற்றப் பொடியணி | சந்த மாக்கொண்ட வண்ணமும் சாற்றினார்" |
"தமக்குத் தந்தையர் தாய்இலர் என்பதும் | அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ | திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால் | எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம்" | (தி. 12 திருஞா. புரா. 828-29) |
|