பக்கம் எண் :

1080
 
773.தூர்த்தர் மூவெயில் எய்து

சுடுநுனைப் பகழிய தொன்றால

பார்த்த னார்திரள் தோள்மேற்

பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்

தீர்த்த மாமலர்ப் பொய்கைத்

திகழ்திரு வாஞ்சியத் தடிகள

சாத்து மாமணிக் கச்சங்

கொருதலை பலதலை யுடைத்தே.

3



எனச் சேக்கிழார் குறிப்பருளியவாற்றான் உணர்க. இக்குறிப்பினுள், "அல்லா ஒளி" என்றது, மாயேயங்களை. திருப்பாசுரத்துள், "பூசி" என வந்த வினையெச்சம், 'பூசுதலால்' என்பதன் திரிபாய், 'தந்தையாரொடு தாய் இலர்' என்றதனை விளக்கும் ஏதுவாயிற்று, "உழுவார் உலகத்தார்க் காணிஅஃதாற்றா - தெழுவாரை யெல்லாம் பொறுத்து" (குறள் - 1032) என்பதிற்போல. ஆகவே,


"அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ
திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால்"

(தி. 12 திருஞா. புரா. 828)

என்றது, அவ்வேதுவின் பொருளை விரித்தவாறாதல் அறிக.

"இடிகுரல்" வினைத்தொகை. 'கறுவிலா மனத்தார்கள்' என்றது, 'அருளுள்ளம் உடையவர்கள்' எனப் பொருள் தந்தது, காணுதல், தன் பின் விளைவையும் உடனுணர்த்தி நின்றது. "மன், உம்" அசைநிலைகள்.


"கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண்டற்று"

என்ற திருக்குறளிலும் (1146) 'மன், உம்' என்னும் இரண்டும் இணைந்து அசைநிலையாயினவாறு அறிக.

3. பொ-ரை: தீர்த்தமாகிய, சிறந்த, பூக்களையுடைய பொய்கைகளையுடைய, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், நெறி பிறழ்ந்தவரது மூன்று மதில்களை, சுடுகின்ற முனையையுடைய ஓர் அம்பினால் அழித்து,