பக்கம் எண் :

1082
 
775.மைகொள் கண்டர்எண் தோளர்

மலைமக ளுடனுறை வாழ்க்கைக்

கொய்த கூவிள மாலை

குலவிய சடைமுடிக் குழகர்

கைதை நெய்தலங் கழனி

கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்

பைதல் வெண்பிறை யோடு

பாம்புடன் வைப்பது பரிசே.

5

776.கரந்தை கூவிள மாலை

கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்

பரந்த பாரிடஞ் சூழ

வருவர்நம் பரமர்தம் பரிசால்



கு-ரை: "தானதுவாம்" என்றதில் தான் அசைநிலை. "அது" பகுதிப் பொருள் விகுதி.

5. பொ-ரை: கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மலைமகளோடு உடன்உறைகின்ற வாழ்க்கையையும், பறிக்கப்பட்ட கூவிளை இலையால் ஆகிய மாலை விளங்குகின்ற சடைமுடியையும் உடைய அழகராகிய, நெய்தற் பூக்களையுடைய அழகிய கழனிகளில், தாழம்பூக்கள் மணம் வீசுகின்ற, புகழையுடைய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்கு, இளைய வெண்பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிவதுதான் இயல்பு.

கு-ரை: 'வாழ்க்கைக் குழகர், சடைமுடிக் குழகர்' என இயையும். 'கழனி கைதையைக் கமழும் வாஞ்சியம்' என்றலுமாம். பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிதல், எல்லாவற்றையும் தம் வண்ணமாக்கி ஏற்றலைக் குறிப்பதாம். 'பிறையும், பாம்புமன்றி, வேறு தலைச்சூட்டு இல்லாதவர்' என்பது நயம்.

6. பொ-ரை: தம் இயல்பு காரணமாக, கரந்தைப் பூவினாலும், கூவிள இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிக்க பூதகணங்கள் புடைசூழ வருபவரும், நம் இறைவரும் ஆகிய, திருத்தமான மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி