| திருந்து மாடங்கள் நீடு | | திகழ்தரு வாஞ்சியத் துறையும் | | மருந்த னார்அடி யாரை | | வல்வினை நலியஒட் டாரே. | | 6 |
777. | அருவி பாய்தரு கழனி | | அலர்தரு குவளையங் கண்ணார் | | குருவி யாய்கிளி சேர்ப்பக் | | குருகினம் இரிதரு கிடங்கில் | | பருவ ரால்குதி கொள்ளும் | | பைம்பொழில் வாஞ்சியத் துறையும் | | இருவ ரால்அறி யொண்ணா | | இறைவன தறைகழல் சரணே. | | 7 |
இருக்கும் அமுதம் போல்பவர், தம் அடியாரை, வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாது காப்பவரேயாவர். கு-ரை: "மாலை" என்றதனை, ஏனையவற்றிற்குங் கூட்டுக. ஏகாரம், தேற்றம். 7. பொ-ரை: மலர்ந்த குவளைப் பூப்போலும் கண்களையுடைய மகளிர், நீர்த் திரள் பாய்கின்ற கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும், கிளிகளையும் அங்கு நின்றும் நீங்கிச் சென்று சேரப் பண்ணுகையால், குருகுகளின் கூட்டம் அஞ்சி நீங்குகின்ற கால்வாய்களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற, பசிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், 'மால், அயன்' என்பார்க்கு அறிய ஒண்ணாத இறைவரது, ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளே நமக்குப் புகலிடம். கு-ரை: "அருவி" உவமையாகுபெயர். "ஆய்" என்றது, இடைநிலைத் தீவகம். கழனிகளில் விளைந்துள்ள நெற்கதிர்களைக் கவர வரும் குருவிகளையும், கிளிகளையும் மகளிர் ஓட்ட, அவை பறந்து சென்று சேரும் ஓசையைக் கேட்டு, கால்வாய் அருகில், மீனைக் கவர இருக்கும் குருகுகள் அஞ்சி நீங்கும் என்றவாறு. 'குருவி, கிளி' என்பவை, மீன் வகைகள் என்பாரும் உளர். "இருவர்" என்றது, தொகைக் குறிப்பு.
|