பக்கம் எண் :

1084
 
778.களங்க ளார்தரு கழனி

அளிதரக் களிதரு வண்டு

உளங்க ளார்கலிப் பாடல்

உம்பரில் ஒலித்திடுங் காட்சி

குளங்க ளால்நிழற் கீழ்நற்

குயில்பயில் வாஞ்சியத் தடிகள்

விளங்கு தாமரைப் பாதம்

நினைப்பவர் வினைநலி விலரே.

8

779.வாழை யின்கனி தானும்

மதுவிம்மு வருக்கையின் சுளையும்

கூழை வானரந் தம்மிற்

கூறிது சிறிதெனக் குழறித்

தாழை வாழையந் தண்டாற்

செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்

ஏழை பாகனை யல்லால்

இறையெனக் கருதுதல் இலமே.

9



8. பொ-ரை: ஏர்க்களம் நிறைதற்கு ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர, அதனால் மகிழ்வுற்ற வண்டுகள், கேட்போர் உள்ளம் இன்பம் நிறைதற்குரிய ஆரவாரமான இசை, மேற்சென்று ஒலிக்கின்ற கேள்வியை, குளக்கரைகளில் உள்ள ஆலமரத்தின் கீழ்க்கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரது, ஒளி வீசுகின்ற, தாமரை மலர்போலும் திருவடிகளை நினைப்பவர் வினையால் துன்புறுத்தப்படுதல் இலராவர்.

கு-ரை: ஏர்க்களம் நிறைதல், நெல்லால் என்க. அன்பைத் தருதலாவது, அதனை வெளிப்படுத்துதல்; அஃதாவது உபசரித்தல். எனவே, வயல்கள் வண்டுகட்கு வேண்டும் தேனைத் தந்தன என்க. இனி, 'அளி, தேன்' என்றே உரைப்பினுமாம். இசையை, "பாடல்" என்றதும், கேள்வியை, "காட்சி" என்றதும் பான்மை வழக்கு. "நிழல்" என்றது, கீழ்க்கிளையை. "கீழ்" என்றது, ஏழனுருபு. பயிலுதல், அவ்விசையோடு தன் குரல் அளவொத்து அமையுமாறு அமைக்க முயலுதல். 'நினைபவர்' எனப்பாடம் ஓதுதல் சிறக்கும்.

9. பொ-ரை: வாழைப் பழங்களையும், சாறு மிக்கொழுகுகின்ற பலாப் பழத்தின் சுளைகளையும், 'எனக்கு வைத்த இப் பங்கு சிறிது'