780. | செந்நெ லங்கலங் கழனித் | | திகழ்திரு வாஞ்சியத் துறையு | | மின்ன லங்கலஞ் சடையெம் | | மிறைவன தறைகழல் பரவும் | | பொன்ன லங்கல்நன் மாடப் | | பொழிலணி நாவல்ஆ ரூரன் | | பன்ன லங்கனன் மாலை | | பாடுமின் பத்தரு ளீரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
என்று இகழ்ந்து, அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள் கலாய்த்து, தாழை மட்டையும், வாழை மட்டையுமாகிய கோல்களால் போர் செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் மங்கை பங்காளனை யல்லது வேறொருவரை, யாம், 'கடவுள்' என்று நினைத்தல் இலம். கு-ரை: கூறு - பங்கு. "தாழை, வாழை" என்றன ஆகுபெயர்கள். "தண்டு" என்றது, பயனால் அதனோடு ஒத்ததனை. 10. பொ-ரை: செந்நெற்களையுடைய அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், இனிய மாலைகளை யணிந்த சடையையுடைய எம் இறைவனது, ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த, பொன்னரி மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய, சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது, பல அழகுகளையுடைய, கற்கத்தகுந்த நல்ல பாமாலையை, அடியராய் உள்ளவர்களே, பாடுமின்கள். கு-ரை: 'பாடினால் அவனை எளிதிற் பெறுவீர்கள்' என்பது குறிப்பெச்சம். 'வயல்களில் செந்நெல் நிறைந்திருப்பது, அந்நெற்களை நிரம்ப ஏற்றிய மரக்கலம்போல் உளது' என்றபடி. 'பரவும் மாலை, ஆரூரன் மாலை' எனத் தனித்தனி இயையும். "பொன் அலங்கல்" என்றதற்கு, "மண்மகளுக்கு அணியப்பட்ட பொன்மாலை போலும்" என்று உரைப்பினுமாம். 'நலக் கல்' என்பது மெலிந்து நின்றது. 'மின் அலங்கல்' எனப் பிரித்தும், மூன்றாம் அடியில், 'பொன்னலங்கல் நன்மாடம்' எனப் பாடம் ஓதியும், அவற்றிற்கியைய உரைப்பாரும் உளர்.
|