பக்கம் எண் :

109
 

துணைபுரிவது ஆகும். அக்கல்வியும் தெளிவும் தமிழ் உலகிற் பெருகுதல் வேண்டும். ஆய்வு நெறிகளாற் புதுமை காணும் விருப்பு, கற்றவர் மாட்டுப் பெருகிவரும் இந்நாளில், இம்முயற்சி பெருவெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையில் சைவ உலகம் நிற்கின்றது.

புறநிலை அகநிலை ஆகிய இரு நிலையிலும் விளங்கித் தோன்றித் தமிழகத்தின் பக்தி வளத்தை - அன்புச் செல்வத்தை - தெய்வத் தீந்தமிழ்த் திரு நிதியை யாண்டும் பரவச் செய்தல் வேண்டும். அக் கடனை அனைத்துத் தமிழர்களும் மேற்கொண்டால் எதிர்காலம் எல்லா நலங்களும் விளைந்து சிறப்பதாக இருக்கும் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை.

சுந்தரர் செந்தமிழ் வாழ்க ! சிவநெறித் தமிழகம் வாழ்க !!