794. | கொம்பைப்பிடித் தொருக்காலர்க | | ளிருக்கான்மலர் தூவி | | நம்பன்நமை யாள்வான்என்று | | நடுநாளையும் பகலும் | | கம்பக்களிற் றினமாய்நின்று | | சுனைநீர்களைத் தூவிச் | | செம்பொற்பொடி சிந்துந்திருக் | | கேதாரமெ னீரே. | | 3 |
795. | உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் | | திழப்பார்களுஞ் சிலர்கள் | | வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் | | மதிமாந்திய மாந்தர் |
3. பொ-ரை: உலகீர், யோகதண்டத்தை ஊன்றி, ஒருவழிப்படுத்துகின்ற உயிர்ப்பினை உடைய யோகிகள், 'இவனே நம்மை ஆள்பவன்' என்று, நள்ளிரவிலும், பகலிலும் மந்திர ஒலியோடு மலர்களைத் தூவி விரும்பப்படுகின்ற இறைவனது, அசைதலையுடைய ஆண் யானையின் கூட்டம் தொடர்ந்துவந்து நின்று, பல சுனைகளின் நீரை இறைத்து, செம்பொன்னினது பொடியை உதிர்க்கின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். கு-ரை: 'ஒருக்கு காலர்கள்' என்பது, குறைந்து நின்றது. கால் - காற்று; உயிர்ப்பு. ''தூவி'' என்ற வினையெச்சம், ''நம்பன்'' என்ற வினைக் குறிப்புப் பெயர் கொண்டது. இனி, ''தூவி'' என்றதனை, 'தூவ' எனத் திரித்து, ''சிந்தும்'' என்றதனோடு முடித்தலுமாம். ஆதல்-தொடர்ந்து வருதல். இவ்வாறன்றி, 'களிறு' என்பது, விரித்தலாயிற்று எனலுமாம். சுனைகளது பன்மையை, நீர்மேல் ஏற்றி அருளினார். பொன்வண்ணமான மலையில் சுனை நீர்களை வலிமைப்பட இறைத்தலால், பொற்பொடிகள் உதிர்வவாயின என்க. இத் திருப்பாடலுள் 'யோகிகள் தாமும் இரவும் பகலும் வணங்குவாராக, நீவிர் வாளா பொழுது கழிக்கின்றீர்; இது பொருந்துவதோ' என்று அருளியவாறு. 4. பொ-ரை: அறிவை அழித்துக்கொண்ட மாந்தர்களே, பொருளைத்தேடி, உழக்கரிசியை அட்டு உண்ணுதல் ஒன்றைச் செய்து விட்டு, எஞ்சியவற்றைத் தொகுத்துவைத்துப் பின் இழந்து போவாரும் சிலர் இவ்வுலகில் உளர்; அவர்கள், 'அறம்' என்றாலோ,
|