| சழக்கேபறி நிறைப்பாரொடு | | தவமாவது செயன்மின் | | கிழக்கேசல மிடுவார்தொழு | | கேதாரமெ னீரே. | | 4 |
796. | வாளோடிய தடங்கண்ணியர் | | வலையில்லழுந் தாதே | | நாளோடிய நமனார்தமர் | | நணுகாமுனம் நணுகி | | ஆளாயுய்ம்மின் அடிகட்கிட | | மதுவேயெனில் இதுவே | | கீளோடர வசைத்தானிடங் | | கேதாரமெ னீரே. | | 5 |
'அஃது எமக்கு வேண்டா; யாம் உண்டு உயிர் வாழ்வேம்' என்று போவர். வஞ்சனையால் தம் வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொள்கின்ற அவர்களோடு கூடி, அவர்களது நோன்பாகிய அச்செயலை நீவிர் செய்யன்மின்; விடியற்காலையில் பகலவன் வருகையை எதிர்நோக்கி நின்று, மந்திர நீரை இறைத்துக் காலைச் சந்தியை முடிக்கின்றவர்கள் வணங்குகின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். கு-ரை: உழக்கு, நாழியின் நாற்கூற்றில் ஒருகூறு. 'உண்பது நாழி' என்றும், ''நாழி யரிசிக்கே நாம்'' என்றும் (நல்வழி), மக்கள்தம் உணவளவு கூறப்படுமாகலின், ''உழக்கு'' என்றது அவர் தம் உண்ணுதற் செயலின் இழிபு தோற்றிற்று என்க. ஏகாரம், செயற்பாலனவாய பிற செயல்களின் நின்று பிரித்தலின், பிரிநிலை. ''படைத்து'' என்றதனை முதற்கண் வைத்து உரைக்க. படைத்தல் - உளவாக்குதல். 'வழக்கு' என்பது, 'அறிந்தார்க்கு உரிய முறைமை' என்னும் பொருளதாய், அறத்தைக் குறித்தது. மாந்துதல் - குடித்தல்; ''அறிவைக் குடித்த'' என்றது, பான்மை வழக்கு, ''மாந்தர்'' என்றது விளி. ''சழக்கு'' என்றது, இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லிக் கரத்தலை. 'பிழைக்கே யென்பர்' என்பதும் பாடம். 5. பொ-ரை: உலகீர், நாட்கள் ஓடிவிட்டன; ஆதலின், இயமன் தூதுவர் வருதற்கு முன்பு, வாள்போல இருபக்கமும் ஓடுகின்ற, அகன்ற கண்களையுடைய மகளிரது ஆசையாகிய வலையிற் சிக்காமல், இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழைமின்கள்;
|