803. | மலைச்சாரலும் பொழிற்சாரலும் | | புறமேவரும் இனங்கள் | | மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட | | மலங்கித்தம களிற்றை | | அழைத்தோடியும் பிளிறீயவை | | அலமந்துவந் தெய்த்துத் | | திகைத்தோடித்தம் பிடிதேடிடுஞ் | | சீபர்ப்பத மலையே. | | 2 |
என்றும் (தி. 12 திருநா. புரா. 348, தி. 12 திருஞான. புரா. 1027). 'திருச்சிலம்பு' (தி. 12 திருநா. புரா. 349.) என்றும் குறித்தருளுதலாலும், "திருப்பருப்பதம்" என்பதே தமிழ் வழக்கு என்பதும், சுவாமிகள், வடமொழி வழக்காக, "சீபர்ப்பதம்" என அருளிச்செய்தார் என்பதும் பெறப்படும். 'பர்வதம்' என்னும் ஆரியச்சொல், 'பர்ப்பதம்' எனத் திரிந்து, ஆரியத்துள் முப்பதாம் மெய் ரகாரத்தோடு இணைந்து, ஈகாரத்தான் ஊரப்பட்டு, திரு என்னும் பொருள் தந்து நின்ற ஓரெழுத்தொரு மொழியின் திரிபாகிய, 'சீ' என்பதனை, முதற்கண் ஏற்று நின்றது. 'சீ' என்பது, 'பர்ப்பதம்' என்பதனோடு ஒட்டி ஒரு சொல்லாய் நிற்றலின், 'பர்ப்பதம்' என்பதன்கண் உள்ள குற்றொற்றாகிய ரகர மெய்யின்மேல் உகரம் வாராதொழிதலும் பொருந்துவதாயிற்று. இவ்வாறே, 'சொரூப லக்கணம், தடத்த லக்கணம்' என்றாற் போலும் தொகைச் சொற்களுள், லகர மெய் போல்வன, மொழி முதற்கண் வந்தகனவாகாது, மொழியிடைக்கண் வந்தனவாகவே கொள்ளப்படுதல் காண்க. இம்மலை, 'சீசைலம்' எனவும் வழங்கப்படும். "மானும்" என்றது இன எதுகை. 2. பொ-ரை: குறவர்கள் தங்கள் மலைப்பக்கங்கட்கும் சோலைப் பக்கங்கட்கும் அப்பாற்பட்ட இடங்களினின்றும் வருகின்ற யானைகளைப் பற்றித் தங்கள் மலையிடத்துக் கொணர்ந்து பிணித்து வைத்து அவைகளைத் துன்புறுத்தி உணவை உண்பிக்க, அதனைக் கண்ட பெண் யானைகள் தமது ஆண் யானைகளும் அவர்களால் பற்றப்படுங்கொல் என மனங்கலங்கி அவைகளை அழைத்து ஓடவும், அதனையறியாமல் அவ்வாண் யானைகள் தம் பெண் யானைகள் அவர்கள் கையகப்பட்டனகொல் என மருண்டு பிளிறுதலைச் செய்து,
|