பக்கம் எண் :

1110
 
804.மன்னிப்புனங் காவல்மட

மொழியாள்புனங் காக்கக்

கன்னிக்கிளி வந்துகவைக்

கோலிக்கதிர் கொய்ய

என்னைக்கிளி மதியாதென

எடுத்துக்கவ ணொலிப்பத்

தென்னற்கிளி திரிந்தேறிய

சீபர்ப்பத மலையே.

3



பல இடங்களில் திரிந்து அவைகளைக் காணாது இளைத்துவந்து, மீளவும் செய்வதறியாது திகைத்து அவைகளைத் தேடி ஓடுகின்ற, 'திருப் பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை.

கு-ரை: "சாரல்" என்பவற்றில் நான்கனுருபு விரிக்க. இனங்களாவன, யானை இனம் என்பது இடத்தால் விளங்கிற்று. 'குறவர்கள்' என்பது, ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. 'தனகளிற்றை, தன்பிடி' என்பன பாடம் அல்ல. "பிடி" எனப் பின்னர் வருகின்றமையின், "அழைத் தோடியும்" என வாளா அருளினார். "அழைத்தோடி" என்றதனை, 'அழைத் தோட" எனத் திரிக்க. "திகைத்து" என்றது, உயிரெதுகை.

3. பொ-ரை: தினைப் புனத்தின் காவலையுடைய இளமைச் சொற்களையுடைய குறமகள் அங்குத் தங்கி அப்புனத்தைக் காத்திருக்குங்கால், இளம் பெண்போலும் கிளி வந்து, கிளைத்த தாளின்கண் உள்ள கதிர்களைக் கவர, அதனைக் கண்டு அவள், 'இக்கிளி என்னை மதியாதுபோலும்' என்று சினந்து, கவணை எடுத்து அதனாற் கல்லை, ஓசையுண்டாக வீச, அவ்வழகிய நல்ல கிளி, தன் எண்ணம் மாறி வெளியேறுகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை.

கு-ரை: இளமைத் தன்மையை, மொழிமேல் வைத்துணர்த்தியவாறு, இளம்பெண்போறல், அழகு முதலியவற்றால் விரும்பப் படுதல். "கோல்" என்றது, தாளினை. எனவே, 'கோலி' என்றது, 'தாளின்கண் உள்ளது' என்றவாறாம். "ஒலிப்ப" என்றது, தன் காரணந் தோற்றி நின்றது. 'கல்லை' என்பது, ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. தென் - அழகு. பலவிடத்துப் பல பெண்டிர் செய்வனவற்றை, ஒருத்திமேல் வைத்து அருளியவாறு. இது, வருகின்ற திருப்பாடற்கும் ஒக்கும்.