பக்கம் எண் :

1111
 
805.மய்யார்தடங் கண்ணாள்மட

மொழியாள்புனங் காக்கச்

செவ்வேதிரிந் தாயோவெனப்

போகாவிட விளிந்து

கய்பாவிய கவணான்மணி

எறியஇரிந் தோடிச்

செவ்வாயன கிளிபாடிடுஞ்

சீபர்ப்பத மலையே.

4

806.ஆனைக்குலம் இரிந்தோடித்தன்

பிடிசூழலில் திரியத்

தானப்பிடி செவிதாழ்த்திட

அதற்குமிக இரங்கி

மானக்குற அடல்வேடர்கள்

இலையாற்கலை கோலித்

தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ்

சீபர்ப்பத மலையே.

5



4. பொ-ரை: மை பொருந்திய பெரிய கண்களையுடையவளும், இளமையான சொற்களையுடையவளும் ஆகிய குறமகள் தினைப்புனத்தைக் காத்தற் பொருட்டுப் பலவிடத்தும் நன்றாகத்திரிந்து 'ஆயோ' என்று சொல்லி ஓட்டவும், போகாது விடுதலினாலே வருந்தி, கையிற் பொருந்திய கவணால் மணியாகிய கல்லை வீச, சிவந்த வாயினை யுடைய கிளி அஞ்சி ஓடி ஒலிக்கின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை.

கு-ரை: விளிதல் - இறத்தல்; அது, பெருந்துன்பம் எய்துதலைக் குறித்தது. பாடுதல் - ஒலித்தல். குறமகள், 'ஆயோ' என்று பாடியதற்கு எதிராகக் கிளி தானும் பாடிடும்' என்பது நயம். இரண்டாவது, நான்காவது அடிகளில் இன எதுகை வந்தது. இதனானே, 'மையார்' எனவும், 'கைபாவிய' எனவும் ஓதுதல் பொருந்தாமையறிக.

5. பொ-ரை: ஆண் யானைகளின் கூட்டம், தனது பெண் யானைகளின் கூட்டம், சாரலிற் பல இடங்களிலும் சென்று திரிதலினால் அதனைக் காணாது, தேடி ஓட, சென்ற இடங்களில் அப்பெண் யானைகளின் கூட்டமும் ஆண் யானைகளின் கூட்டத்தைக் காணாது அதன்