பக்கம் எண் :

1112
 
807.மாற்றுக்களி றடைந்தாய் என்று

மதவேழங்கை யெடுத்து

மூற்றித்தழ லுமிழ்ந்தும்மதம்

பொழிந்தும்முகஞ் சுழியத்

தூற்றத்தரிக் கில்லேனென்று

சொல்லிஅய லறியத்

தேற்றிச்சென்று பிடிசூளறுஞ்

சீபர்ப்பத மலையே.

6



குரலோசையைக் கேட்டற் பொருட்டுச் செவி தாழ்த்து நிற்க, அந் நிலைக்கு மிக இரங்கி, வீரத்தை உடைய குறவர்களாகிய, வெற்றி பொருந்திய வேடர்கள், இலைகளால் கல்லை செய்து அமைத்து, அவைகளில் தேனைப் பிழிந்து வார்த்து, அப்பெண்யானைக் கூட்டத்திற்கு இனிதாக ஊட்டுகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை.

கு-ரை: "தன்" என்றது, குலத்தை யாதலின், பால்வழுவின்மை யறிக. "பிடி" என்றன ஆகுபெயர். தானம் - இடம். 'அத் தானம்' எனச் சுட்டு வருவிக்க. 'குறவர்' என்பது சாதி குறித்தும், 'வேடர்' என்றது, தொழில் குறித்தும் நின்றமையின், மிகையாகாமை யுணர்க. 'வேட்டம் செய்து கொலைபுரியும் அவர்க்கும் இரக்கம் தோற்றுவிப்பதாய் இருந்தது, அப் பெண்யானைகளின் நிலை' என்ற படி. "கலை", இடைக்குறை. கல்லையை, இக்காலத்தார், 'தொன்னை' என்ப.

6. பொ-ரை: மதத்தை உடைய ஆண்யானை ஒன்று தன் பெண் யானையை, 'நீ மற்றோர் ஆண்யானையைச் சார்ந்தது என்' என்று சொல்லிக் கையை உயர எடுத்துச் சினம் மிகுந்து, கண்களினின்றும் நெருப்புப் பொறியைச் சிதறி, மதநீரைப் பொழிந்து முகத்தைச் சுளிக்க, அதனைக் கண்ட பெண்யானை, 'நீர் இவ்வாறு அடாப் பழி சொல்லித் தூற்றின் உயிர் தரிக்கலாற்றேன்' என்று, அயலறியத் தனது தவறின்மையைச் சூளறுத்துக் காட்டி அவ்வாண்யானையைத் தெளியப்பண்ணி அதனை அடைகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே எங்கள் சிவபெருமானது மலை.

கு-ரை: 'தவறிலதாகிய தனது பிடியைத் தவறுடையதாக நினைத்து வெகுண்டது, மதமயக்கத்தால்' என்பார், "மத வேழம்" என்று அருளினார். கையை உயர்த்தியது, அடித்தற்கு. 'எனினும்.