பக்கம் எண் :

1113
 
808.அப்போதுவந் துண்டீர்களுக்

கழையாதுமுன் னிருந்தேன்

எப்போதும்வந் துண்டால்எமை

எமர்கள்சுழி யாரோ

இப்போதுமக் கிதுவேதொழில்

என்றோடிஅக் கிளியைச்

செப்பேந்திள முலையாள்எறி

சீபர்ப்பத மலையே.

7


அடியாது பொறுத்து நின்று கேட்டது' என்றற்கு, "எடுத்து" என்றே போயினார். 'முற்றி' என்பது, நீட்டல் பெற்றது. அதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது.

'சூழறும்' என்பது பாடம் அன்று "தேற்றிச் சென்று சூளறும்" என்றதனை, 'சூளறுத்துத் தேற்றிச் செல்லும்' என மாற்றி யுரைக்க.

7. பொ-ரை: தினைப்புனத்தைக் காக்கின்ற, கிண்ணம் போலும், உயர்ந்து தோன்றும், இளமையான தனங்களையுடைய குறமகள், தினையை உண்ண வந்த கிளிகளைப் பார்த்து, 'முன்னே வந்து தினையை உண்ட உங்களுக்கு இரங்கி, உங்களை அதட்டாது அப்போது வாளா இருந்தேன்; ஆயினும், நீவிர் இடையறாது வந்து தினையை உண்டால் எங்களை, எங்கள் உறவினர் வெகுள மாட்டார்களோ? ஆதலின் இப்போது உமக்குச் செய்யத் தக்க செயல் இதுதான்' என்று சொல்லி, அவைகளைக் கவணால் எறிகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபெருமானது மலை.

கு-ரை: செய்யுளாகலின், "முன்" என்ற பெயர் பின்னும், "அப்போது" என்ற சுட்டுப் பெயர் முன்னும் வந்தன, "உண்டீர்களுக்கு" என்றது, அழையாமையாகிய தொழிலுக்கு உரிய, 'இன்னதற்கு' என்னும் முதனிலை.

அழைத்தல் - கூப்பிடுதல்; அதட்டுதல். 'சுழியாரோ' என்பதும், 'இதுவோ தொழில்' என்பதும் பாடங்கள். "அக் கிளி" என்றதில் சுட்டு, 'அத்தன்மையை உடைய' எனப் பொருள்தந்தது. தன்மை, எப்போதும் வந்து உண்ணுதல். கவணால் என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது.