பக்கம் எண் :

1127
 
825.வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி யாடியை
முளிறி லங்கு மழுவா ளன்முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.

4

826.

புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்

இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்

முலைகள் உண்டு தழுவுக் குட்டி யொடுமுசுக்

கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.

5

827.

மடமு டைய அடியார் தம்மனத் தேயுற

விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்

4. பொ-ரை: உலகீர், வெம்மை பொருந்திய மழுப்படையை உடைய சிவபெருமான் முற்பட்டு எழுந்தருளியிருக்கின்ற இடம், பிளிறுகின்ற, மனவலியையும், பெரிய தும்பிக்கையையும், பொழிகின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்றி யானைகளோடு, பிடி யானைகள் சூழந்துள்ள, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; ஆதலின், உங்கள் அறியாமை நீங்குதற்பொருட்டு, அங்குச்சென்று, திருநீற்றில் மூழ்குகின்றவனாகிய அப்பெருமானை வழிபடுமின்கள்.

கு-ரை: 'அவ் வெண்பொடி யாடியை' என, எடுத்துக்கொண்டு உரைக்க. முளிறு - முளி; வெம்மை.

5. பொ-ரை: உலகீர், புல்லிய சடையை உடைய அற வடிவினனும், இலை வடிவத்தைக்கொண்ட சூலப் படையை உடைய எம் தந்தையும், எங்கள் தலைவனும் ஆகிய இறைவனது இடம், பாலை உண்டு தழுவுதலை உடைய குட்டியோடு பெண் முசுவும், அதனோடு, ஆண் முசுவும் மரக்கிளைகளில் தாவுகின்ற காட்டினையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை உங்கள் கீழ்மைகள் எல்லாம் நீங்கும் பொருட்டுச் சென்று வழிபடுமின்கள்.

கு-ரை: 'தழுவி' என்பதே பாடம் எனின், அதனை, 'தழுவ' என்பதன் திரிபென்க. "கலை" எனப் பின்னர் வருதலின், "முசு" என்றும், அதுபற்றிப் பின்னர், "கலை" என்றும் போயினார்.

6. பொ-ரை: நஞ்சினை உடைய கண்டத்தையுடையவனும், தேவர்கட்கு மேலானவனும், படமுடைய பாம்பை யுடையவனும்