| படமு டைய அரவன் றான்பயி லும்மிடம் | | கடமு டைய புறவிற் றண்கழுக் குன்றமே. | | 6 |
828. | ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற | | ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடம் | | தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடவே | | கான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே. | | 7 |
829. | அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற | | வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் |
ஆகிய சிவபெருமான், தன்னையன்றி வேறொன்றையும் அறியாத அடியவரது மனத்தில் பொருந்தும் வண்ணம் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், காட்டையுடைய, முல்லை நிலத்தோடு கூடிய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே. கு-ரை: இது முதலாக உள்ள மூன்று திருப்பாடல்களில், 'உலகீர், உங்கள் குறைகளெல்லாம் நீங்குதற் பொருட்டு அதனை வழிபடுமின்கள்' என்பது குறிப்பெச்சமாக அருளிச்செய்யப்பட்டது. அஃது எவ்வாற்றாற் பெறுதும் எனின், பின்னரும் ஒரு திருப்பாடலுள் அதனை எடுத்தோதி, இடையே இவற்றை வைத்தருளிய வாற்றாற் பெறுதும் என்க. ஒன்றையே அறிந்து, பிறவற்றை அறியாதொழிதல் ஒப்புமையால், "மடம்" என்று அருளினார். அடியவர் மனத்தே உறுதலாவது, அவர் அங்ஙனம் வைத்து எண்ணுதல். 7. பொ-ரை: ஞான வடிவினனும், நடனம் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான், குறைபாடு இல்லாத தன் அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணம், நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், தேனும், வண்டும் தேனை உண்டு இனிய இசையைப்பாட, காட்டில் மயில்கள் அதனைக் கேட்டு இன்புற்றிருக்கின்ற திருக்கழுக்குன்றமே. கு-ரை: 'தேன்' என்பதும், வண்டின் வகைகளுள் ஒன்று. 'இன்னிசை பாடியே' என்பது பாடம் அன்று. 8. பொ-ரை: அளவற்ற அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணமும், திருமாலும் நான்முகனும் நாள்தோறும் வந்து வணங்கி வழிபட்ட, மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும்,
|