பக்கம் எண் :

1129
 
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
சந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே.

8


830.பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
கழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே.

9

831.பல்லின் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்
கல்லின் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை

நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், சந்தன மரம் மணம் வீசுகின்ற, முல்லை நிலத்தோடு கூடிய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே.

கு-ரை: 'நட்டமாடி நவிலும் இடம்' என்பது, மேலைத் திருப்பாடலினின்றும் வந்து இயைந்தது. சிந்தை செய்தல், அதன் காரியத்தை உணர்த்திற்று. 'கந்தம் நாறும்' என்பதும் பாடம்.

9. பொ-ரை: உலகீர், பின்னிய சடையின்கண் தலைக் கோலங்களையுடையவனும், 'குழை' என்னும் அணியை அணிந்த காதினை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், மேகங்கள் மிக முழங்க, மிக உயர்ந்த வேயும், கழையுமாகிய மூங்கில்கள் முத்துக்களைச் சொரிகின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, உங்கள் குற்றங்களெல்லாம் நீங்குதற் பொருட்டு வழிபடுமின்கள்.

கு-ரை: 'பின்னு சடை' என்னும் உகரம் தொகுத்தலாயிற்று. 'வேய், கழை' என்பன, மூங்கிலின் வகைகள். 'புன்சடை', 'குழைகொள் முத்தம்' என்பனவும் பாடங்கள்.

10. பொ-ரை: உலகீர், பற்களையுடைய வெண்மையான தலையை உடையவன் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், பாறைகளின்மேல் வீழ்கின்ற வெண்மையான அருவிகளையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, வலிமை மிக்க, திரண்ட தோள்களையுடையவனாகிய நம்பியாரூரனது வனப்புடைய பாடல்களால் துதித்து வழிபடுவோரை வழிபடுமின்கள்.