| மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால் | | சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை: 'மிக்க பயனை அடைவீர்கள்' என்பது குறிப்பெச்சம், 'பல்லில்' என்பது பாடமாயின், 'பல இல்லங்களில் செல்லுகின்ற' என உரைக்க. 'கழுக்குன்றமே, அதனை' என இரண்டாக்கி உரைக்க. "வனப்பு" ஈண்டு, "விருந்து" என்பது, அஃது ஆகுபெயராய், அதனையுடைய பாடலைக் குறித்தது. "சொல்லல் சொல்லி" என்றதில், "சொல்லி" என்பது "உண்ணலும் உண்ணேன்" (கலி. பாலைக்கலி 22) என்பதில், 'உண்ணேன்' என்பதுபோல, 'செய்து' என, பொதுமையாய் நின்றது. இவ்வாறு வழக்கினுள்ளும், செய்யுளுள்ளும் வருதல் காண்க. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | தேனார்ந்த மலர்ச் சோலைத் | திருக்கழுக்குன் றத்தடியார் | ஆனாத விருப்பினொடும் | எதிர்கொள்ள அடைந்தருளித் | தூநாள்வெண் மதியணிந்த | சுடர்க்கொழுந்தைத் தொழுதிறைஞ்சிப் | பாநாடும் இன்னிசையின் | திருப்பதிகம் பாடினார். | 173 | - தி. 12 சேக்கிழார் |
|