82. திருச்சுழியல் பதிக வரலாறு: சுவாமிகள், கழறிற்றறிவாருடன் பாண்டிநாட்டில் திருவிராமேச்சுரம் பணிந்து அங்கிருந்தே திருக்கேதீச்சுரத்தைப் பாடிப் பிறபதிகளையும் வணங்கிக்கொண்டு திருச்சுழியலை யடைந்து தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 கழறிற். புரா. 111) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரை வழிபடுவார் எய்தும் பயன்களை வகுத்து அருளிச்செய்தது. பண்: நட்டபாடை 1 பதிக எண்: 82 திருச்சிற்றம்பலம் 832. | ஊனாய்உயிர் புகலாய்அக | | லிடமாய்முகில் பொழியும் | | வானாய்வரு மதியாய்விதி | | வருவானிடம் பொழிலின | | தேனாதரித் திசைவண்டினம் | | மிழற்றுந்திருச் சுழியல் | | நானாவிதம் நினைவார்தமை | | நலியார்நமன் தமரே. | | 1 |
1. பொ-ரை: உடம்புகளாகியும், அவைகளில் புகுதலை யுடைய உயிர்களாகியும், அகன்ற நிலமாகியும், மேகங்கள் நின்று மழையைப் பொழியும் வானமாகியும், வினைப்பயன் வருதற்கு வழியாகிய உள்ளமாகியும் நிற்பவனாகிய இறைவனது இடம், சோலைகளில் தேனை விரும்பி வண்டுக் கூட்டம் இசைபாடுகின்ற திருச்சுழியலாகும். அதனைப் பல்லாற்றானும் நினைபவர்களை, கூற்றுவன் ஏவலர்கள் துன்புறுத்தமாட்டார்கள். கு-ரை: 'புகல் உயிராய்' எனவும், 'விதிவரு மதியாய்' எனவும் மாற்றி யுரைக்க. நிலத்தையும், வானையும் அருளியது, 'உயிர்கள் 1 'நட்டராகம்' எனச் சில பதிப்புகளில் உளது.
|