முதலிய அங்க ஈனர்கள் முதலாகத் துன்பமுற்றவரை ஆதரித்தல், (13) நோய்க்கு மருந்துகொடுத்தல், (14) குழவியை வளர்த்தல், (15) சுண்ணாம்பு கொடுத்தல், (16) தாம்பூலம் கொடுத்தல், (17) தலைக்கு எண்ணைய்வார்த்தல், (18) முழுகுதற்கு அரைப்புப்பொடிகள் கொடுத்தல், (19) படுக்கை அளித்தல், (20) பூதானம், (21) கோதானம், (22) கன்னிகாதானம் செய்தல், (23) மணம் செய்வித்தல், (24) விளக்குக் கொடுத்தல், (25) தீராக் கடன் தீர்த்தல், (26) சிவனடியார் வேண்டுவன கொடுத்தல், (27) உருத்திராக்கமளித்தல், (28) திருவெண்ணீறு கொடுத்தல், (29) பூசைக்குரிய பொருள்கள் தருதல், (30) சைவ நூல், புராணம் முதலிய நூல்களைத் தருதல், (31) சிவ பத்தியை உபதேசித்தல், (32) அபயமளித்தல் என்பன. இந்திரன் முதலிய தேவர்களைத் துன்புறுத்தியது: 1 தக்கன், தன்னால் மகளாக வளர்க்கப்பட்ட உமாதேவியையும், தான் மருகனாக் கொண்ட பெருமானையும் கண்டுவரக் கயிலை மலைக்குச் சென்றான். அங்கு வாயில் காவலர்களாகவுள்ள பூதர்கள், "நீ சிவ பெருமானை யிகழ்ந்துரைத்தாய்; ஆதலால் உன்னை உள்ளே அனுமதிக்கமுடியாது" என்று கூறி அவனைத் திரும்ப அனுப்பி விட்டனர். அதனால் சினந்த தக்கன் பெருமானிடம் மிக்க சினம் கொண்டான். பின்னர் ஒரு வேள்வி செய்ய முற்பட்டு அதற்குச் சிவபெருமானை அழைப்பதில்லை என்றும் முடிவு செய்தான். திருமால் நான்முகன் முதலிய தேவர்களைக் கொண்டு வேள்வி செய்தான். இதையறிந்த உமாதேவி பெருமானிடம் வேண்டி விடைபெற்று தன் தந்தையியற்றும் வேள்வியைக் காணச் சென்றாள். தக்கன் உமாதேவியைக் கண்டு 'நான் உன்னை அழைக்கவில்லை. நீ ஏன் இங்கு வந்தாய், நீ கயிலைக்குத் திரும்பிச் செல்க' என்று கூறிப் பலவாறு பெருமானையும் இகழ்ந்துரைத்தான். அவற்றைக் கேட்ட உமாதேவியார் சினங்கொண்டு தக்கனைச் சபித்து, திருக்கயிலை யடைந்து பெருமானிடம், தக்கனின் வேள்வியை அழித்தருள வேண்டும் என்று வேண்டினார். அவ்வாறே பெருமான் தமது திருக்கண்ணினின்றும், ஆயிரம் தலைகளையும், ஆயிரம் முகங்களையும் இரண்டாயிரம் தோள்களையும் கொண்ட மிக்க பேரொளியுடைய வீரபத்திரக் கடவுளைத் தோற்றுவித்தார். அவ்வாறே உமாதேவியார் பத்திரகாளியை உண்டாக்கினார். இருவரும் பெருமானை வணங்கிய
1. கந்தபுராணம் - யாக சங்காரப் படலம்.
|