பக்கம் எண் :

1154
 
860.நாதனை நாதமிகுத் தோசைய தானவனை

ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை

மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்

பற்றுவி டாதவனைக் குற்றமில் கொள்கையனைத்

தூதனை யென்றனையாள் தோழனை நாயகனைத்

தாழ்மக ரக்குழையுந் தோடு மணிந்ததிருக்

காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ

கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

9


என்றது செவ்வன் வழக்கிற்காதலின், இவ்வாறு இறந்த காலத்தாற் சொல்லப்படுவன. அவ்விலக்கணத்தின் வழுவினவென்றாதல், வழுவியமைந்தன வென்றாதல் கொள்ளல் கூடாமை யறிக. "அண்டர்" என்றது, சிவபெருமானிடம் நேர்நின்றும், வழிநிலையில் நின்றும் சிவாகமங்களைக் கேட்ட சீவர்களையும், உருத்திரர்களையும், பிற தேவர் முதலானவர்களையும் குறிக்கும். "ஊழி" காலவாகு பெயர். "ஓதியை" என்றது செயப்பாட்டு வினைப் பெயர். "வானவர்தங் கண்டனை" என்றதனை, ஏனையவற்றோடு இயைய வைத்து உரைக்க. கண்டம் கூறு; பகுதி. சிவபெருமான் தேவரில் ஒருவன் போலவும் நிற்றலின், "வானவர்தம் கண்டன்" என்று அருளிச் செய்தார். இனி, கண்டன் - ஒறுப்பவன் எனக் கொண்டு, 'தலைவன்' எனினுமாம்.

9. பொ-ரை: உலகிற்குத் தலைவனும், நுண்ணிய எழுத்தோசையும், பரியதாகிய இசையோசையுமாயும், ஞானமாகிய விளக்கினது ஒளியாயும், உடம்பின்கண் உள்ள உயிரும்! நிலத்தில் வளரும் பயிருமாயும் நிற்பவனும், மாதொரு பாகத்தை உடையவனும். மேலான தகுதியையுடைய, தன் அடியார்களது உள்ளத்தின்மேல் வைத்துள்ள பற்றினைச் சிறிதும் நீங்காதவனும், குற்றம் இல்லாத கொள்கையையுடையவனும், என்னைத் தன் தொண்டினிடத்து ஆளுகின்ற என் தூதனும், தோழனும், தலைவனும் ஆகியவனும், தாழத் தூங்குகின்ற மகரக் குழையையும் தோட்டையும் அணிந்த அழகிய காதினையுடையவனும் ஆகிய, மிக்க நீரையுடைய, 'திருகானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, நாய்போலும் அடியேன் தலைக்கூடப்பெறுவது எந்நாளோ!.

கு-ரை: "நாதன்" என்றதிலும், இரண்டன் உருபு விரிக்க. 'மிகுத்த' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. 'பாதனை' என்பதே பாடம் போலும்! "என்றனை ஆள்" என்பது, "தூதன்" என்றது முதலிய மூன்றனோடும் இயையும். தலைவனாய்