பக்கம் எண் :

1155
 
861.கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்

பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்

உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்

ஒண்பொழில் நாவலர்கோ னாகிய ஆரூரன்

பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்

பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ

மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்

மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே.

10

திருச்சிற்றம்பலம்


இருப்பவனே தூதனாயும், தோழனாயும் இருக்கும் வியப்பினைப் புலப்படுத்தும் முகத்தால், அவனது பேரருட்டிறத்தை நினைந்து உருகியவாறு; அதனை, 'நாயடியேன்' என்றதனாலும் உணர்க. குழை அணிதல் அப்பனாதலையும், தோடணிதல் அம்மையாதலையும் குறிக்கும்.

10. பொ-ரை: கரும்பும், இனிய அமுதமும் போல்பவனாகிய, மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, 'திருக்கானப்பேர்' என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, 'எய்துவது என்று கொலோ' என்று நினைந்து மனம் உளைந்து, உளம் உருகி, அழகிய, புகழ் பொருந்திய, தண்ணிய தமிழால் துதிக்க முயன்ற அழகிய சோலைகளையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இவ்விசைப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள், சிவனடியார்க்கு உள்ள இயல்புகள் அனைத்தையும் எய்தி, எல்லாத் திசைகளும் புகழ நெடிது வாழ்ந்து, பின்பு ஒருகால் பிறவி எய்துவாராயினும், மண்ணுலகிற்குத் தலைவராய் வாழ்தல் திண்ணம்.

கு-ரை: "மனத்து அயரா" என்றதனால், அங்ஙனம் அயருமாறு, மேலைத் திருப்பாடல்களினின்றும் வருவித்து உரைக்கப்பட்டது. 'இருப்பவர்களாய்' என, எச்சமாக்குக. "வான்" என்றது, வீட்டுலகமாகிய சிவலோகத்தை. "இழிந்திடினும்" என்று அருளியதனால், அதன்கட் செல்லுதல் பெறப்பட்டது. சிவபுண்ணியங் காரணமாகச் சிவலோகத்திற் சென்றார். பின்னும் அதனான் ஆண்டே சிவஞானம் இனிது விளங்கப்பெற்றுச் சிவனைப் பெறுதலே பெரும்பான்மையாக,