பக்கம் எண் :

1156
 

மீண்டும் இவ்வுலகில் வந்து பிறத்தல் சிறுபான்மையாதலின், "வானின் இழிந்திடினும்" என எதிர்மறை உம்மை கொடுத்து அருளிச்செய்தார்.

இனி,

"தவஞ்செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து
பவஞ்செய்து பற்ற றுப்பா ராகத் - தவஞ்செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலை"

- சிவஞானபோதம். சூ. 8 அதி. 1

உடையராகிய அவரை, "மண்டல நாயகராய் வாழ்வர்" என்றது, "வறுமையாம் சிறுமை" இன்றியும், "வாழ்வெனும் மைய" லுட் படாதும் (சிவஞானசித்தி - சூ - 2. 91) எளிதிற் சிவஞானத்தை எய்தி, சீவன் முத்தராய் வாழ்வர் என்றவாறாம்.

சேரமான் பெருமாள் நாயனார் புராணம்

 
மன்னுதிருக் கானப்பேர்

வளம்பதியில் வந்தெய்திச்

சென்னிவளர் மதியணிந்தார்

செழுங் கோயில் வலம்கொண்டு

முன்னிறைஞ்சி உள்ளணைந்து

முதல்வர்சே வடிதாழ்ந்து

பன்னு செழுந் தமிழ்மாலை

பாடினார் பரவினார்.

116

ஆராத காதலுடன்

அப்பதியில் பணிந்தேத்திச்

சீராரும் திருத்தொண்டர்

சிலநாள் அங்கமர்ந்தருளிச்

காராரும் மலர்ச்சோலைக்

கானப்பேர் கடந்தணைந்தார்

போரானேற் றார்கயிலைப்

பொருப்பர்திருப் புனவாயில்.

117

- தி. 12 சேக்கிழார்.