85.திருக்கூடலையாற்றூர் பதிக வரலாறு: சுவாமிகள் திருப்புறம்பயத்திலிருந்து பல தலங்களையும் வணங்கிக் கொண்டு செல்லும் பொழுது திருக்கூடலையாற்றூர் சார,அதனையடையாது திருமுதுகுன்றத்தை நோக்கிச் செல்லுகின்றபொழுது வழியில் பெருமான் வேதியர் வடிவங்கொண்டு நம்பியாரூரர் முன் நின்றார்.நம்பியாரூரர் எதிரில் நின்ற வேதியரை வணங்கி, 'திருமுதுகுன்று எய்துதற்கு வழி இயம்பும்' எனக் கூற, பெருமானும், 'கூடலையாற்றூர் ஏறச்சென்றது இவ்வழிதான்' என்று கூறி, வழித்துணையாய்ச் சென்று மறைந்தருளினார். அப்பொழுது வேதியர் வடிவில் வந்தவர் பெருமானே என்று அதிசயித்துப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 103) குறிப்பு: இத் திருப்பதிகம் நுதலிய பொருள், இதன் வரலாற்றானே விளங்கும். பண்: புறநீர்மை பதிக எண்: 85 திருச்சிற்றம்பலம் 862. | வடியுடை மழுவேந்தி | | மதகரியுரி போர்த்துப் | | பொடியணி திருமேனிப் | | புரிகுழ லுமையோடும் | | கொடியணி நெடுமாடக் | | கூடலை யாற்றூரில் | | அடிகள்இவ் வழிபோந்த | | அதிசயம் அறியேனே. | | 1 |
1. பொ-ரை: கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி, மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு, பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும், கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருநீற்றை யணிந்த பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த
|