863. | வையக முழுதுண்ட | | மாலொடு நான்முகனும் | | பையர வகலல்குற் | | பாவையொ டும்முடனே | | கொய்யணி மலர்ச்சோலைக் | | கூடலை யாற்றூரில் | | ஐயன்இவ் வழிபோந்த | | அதிசயம் அறியேனே. | | 2 |
வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு! கு-ரை: ஈற்றில் வருவித்துரைத்தது, குறிப்பெச்சம். 'வடிவுடை' என்பது பாடமாகாமை அறிந்துகொள்க. "ஏந்தி, போர்த்து" என்ற வினையெச்சங்கள், "கூடலையாற்றூரில்", என்புழி எஞ்சிநின்ற, 'உறையும்' என்பதனோடு முடியும். 'திருமேனி அடிகள்' எனக் கூட்டுக. "வழிபோந்த" என, ஏழாவதன் தொகைக்கண் வல்லினம் இயல்பாயிற்று. "அதிசயம்" என்றது, காரிய வாகுபெயராய், அதனைத்தரும் செயலை உணர்த்தி நிற்றலின், "போந்த" என்ற பெயரெச்சம், தொழிற்பெயர் கொண்டது என்க. 2. பொ-ரை: உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் பிரமதேவனோடும், அரவப் படம்போலும் அல்குலையுடைய, இளைய, பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி, கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன், இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃது என் ஏழைமை இருந்தவாறு! கு-ரை: 'திருமால் முதலிய மூவரோடும் உடனாகி' என ஒரு படித்தாகவே அருளிச்செய்தாராயினும், திருமாலும் பிரமனும் பணிந்து நிற்பவராயும், உமை இறைவரோடு ஒப்ப அருகு வீற்றிருப்பவளாயும் இருப்பர் என்பது பகுத்துணர்ந்து கொள்ளப்படும் என்க. இனி, திருமாலையும், பிரமனையும் தனது திருமேனியிடத்துக்கொண்டு நிற்றலையே, ஈண்டு, "உடனாகி," என்று அருளினார் எனக் கொள்ளுதலுமாம். "நான்முகன்" என்பதிலும் ஒடுவுருபு விரிக்க. 'அரவப்பை அல்குல் இளம் பாவை' என, மாறிக் கூட்டியுரைக்க. "உடன்" என்றதன்பின், 'ஆகி' என்பது, எஞ்சிநின்றது, அவ் வினையெச்சம்,
|