பக்கம் எண் :

1159
 
864.ஊர்தொறும் வெண்டலைகொண்

டுண்பலி யிடும்என்று

வார்தரு மென்முலையாள்

மங்கையொ டும்முடனே

கூர்நுனை மழுவேந்திக்

கூடலை யாற்றூரில்

ஆர்வன்இவ் வழிபோந்த

அதிசயம் அறியேனே.

3

865.சந்தண வும்புனலுந்

தாங்கிய தாழ்சடையன்

பந்தண வும்விரலாள்

பாவையொ டும்முடனே


மேலைத் திருப்பாடலில் உள்ள வினையெச்சங்கள் முடிந்தவாறே முடியும். இவை வருகின்ற திருப்பாடல்களினும் ஒக்கும்.

3. பொ-ரை: ஊர்தோறும் சென்று, வெள்ளிய தலையோட்டை ஏந்தி, 'பிச்சை இடுமின்' என்று இரந்துண்டு, கச்சணிந்த, மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய், கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக்கொண்டு, திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, பேரன்புடையனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!

கு-ரை: 'சென்று, இரந்து' என்பன சொல்லெச்சங்கள். 'இரந்து' என்பது, தன் காரியத்தையும் உடன் உணர நின்றது, "மங்கையொடும்" என்ற உம்மை சிறப்பு. 'இரந்துண்ணும் வாழ்க்கையை யுடையவன், மங்கையொருத்தியை மணந்துகொண்டு, இல்வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றான்' என்பது நயம். அருளுடையனாகிய இறைவனை, பான்மை வழக்கால், 'அன்பன்' என்றலும் அமையும் என்னும் திருவுள்ளத்தால், "ஆர்வன்" என்று அருளிச்செய்தார். ஆர்வம் - பேரன்பு. இனி, 'ஆர்வத்தால் அடையப்படுபவன்' என்றும், 'உயிர்களால் அனுபவிக்கப்படுபவன்' என்றும் உரைப்பினும் அமையும்.

4. பொ-ரை: பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற, நீண்ட சடைமுடியையுடையவனாய்,