பக்கம் எண் :

1160
 
கொந்தண வும்பொழில்சூழ்

கூடலை யாற்றூரில்

அந்தணன் வழிபோந்த

அதிசயம் அறியேனே.

4

866.வேதியர் விண்ணவரும்

மண்ணவ ரும்தொழநற்

சோதிய துருவாகிச்

சுரிகுழ லுமையோடும்

கோதிய வண்டறையுங்

கூடலை யாற்றூரில்

ஆதிஇவ் வழிபோந்த

அதிசயம் அறியேனே.

5


பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய, பாவைபோலும் உமையோடும் உடனாகி, பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருச்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!

கு-ரை: "புனலும்" என்ற உம்மை எச்சத்தொடு சிறப்பு. 'ஏனையபோலத் தங்குதற்றன்மை இல்லாத நீரையும் தங்கியிருக்கச் செய்கின்ற சடை என, அவனது ஆற்றலை வியந்தருளிச் செய்தவாறு.


"நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை"

(தி. 6 ப. 43 பா. 1)

என்று, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்தலுங் காண்க. கருணைக்கு அழகாவது, பெரியராயினார்க்கு, அப்பெருமையைச் சிறக்கச் செய்தல். 'சந்தம்' என்பது, கடைக்குறைந்து நின்றது.

5. பொ-ரை: அந்தணரும், தேவரும், மக்களும் வணங்கி நிற்க, நல்ல ஒளியுருவமாய், சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன், இவ்வழி