பக்கம் எண் :

1161
 
867.வித்தக வீணையொடும்

வெண்புரி நூல்பூண்டு

முத்தன வெண்முறுவல்

மங்கையொ டும்முடனே

கொத்தல ரும்பொழில்சூழ்

கூடலை யாற்றூரில்

அத்தன்இவ் வழிபோந்த

அதிசயம் அறியேனே.

6


யிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!

கு-ரை: ஒளியுருவம், இலிங்க வடிவம்.

"வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர்"

- சிவஞானசித்தி - சூ. 2. 92

ஆதலின், "விண்ணவரும் தொழ" என்று அருளினார். வேதியர் மண்ணகத் தேவராதலின், அவரை வேறெடுத்து விண்ணவர்க்கு முன்னே வைத்து அருளிச் செய்தார். அவர் உண்மையில் மண்ணகத் தேவராவது, சிவபத்தியுடையராய வழியே என்பது ஈண்டு இனிது விளங்கும். இவரை, "செம்மை வேதியர்" என்று அருளிச் செய்வார், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (தி. 3 ப. 22 பா. 2).

6. பொ-ரை: தான் வல்லதாகிய வீணையோடும், வெள்ளிய முப்புரி நூலை அணிந்து, முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி, பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற எந்தை, இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!

கு-ரை: "வீணையொடும், பூண்டு" என்ற இரண்டும், மேலைத் திருப்பாடலிற்போலவே, 'உறைகின்ற' என்பதனோடு முடிதலின், "வினையொடும்" என்றதனை, 'கைப்பொருளொடும் வந்தான்' என்பதுபோலக் கொள்க.