பக்கம் எண் :

1162
 
868.மழைநுழை மதியமொடு

வாளர வுஞ்சடைமேல்

இழைநுழை துகிலல்குல்

ஏந்திழை யாளோடும்

குழையணி திகழ்சோலைக்

கூடலை யாற்றூரில்

அழகன்இவ் வழிபோந்த

அதிசயம் அறியேனே.

7

869.மறைமுதல் வானவரும்

மாலயன் இந்திரனும்

பிறைநுதல் மங்கையொடும்

பேய்க்கண முஞ்சூழக்


7. பொ-ரை: மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும், கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து, நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும், தாங்கிய அணிகலங்களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி, தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகன், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!

கு-ரை: "சடைமேல்" என்பதன்பின், 'வைத்து' என்பது, எஞ்சிநின்றது. "மழை நுழை மதியம்" என்றது அதனது இனிய பண்பினையும் "வாளரவம்" என்றது அதனது கடிய பண்பினையும் எடுத்தோதி, அவ்விரண்டனையும் உடங்கியைந்து வாழவைத்தான் என வியந்தருளியவாறு. "இழை நுழை துகிலல்குல்" என்றது, தான் தோலை உடையாகக் கொள்ளுதலையும், "ஏந்திழையாள்" என்றது, தான் பாம்பையே அணிகலங்களாக அணிதலையும் குறிப்பினால் விளக்கி, நகைதோற்றுவித்தன.

8. பொ-ரை: வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க, பிறைபோலும் நெற்றியையுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான்,