| குறள்படை யதனோடுங் | | கூடலை யாற்றூரில் | | அறவன்இவ் வழிபோந்த | | அதிசயம் அறியேனே. | | 8 |
870. | வேலையின் நஞ்சுண்டு | | விடையது தான்ஏறிப் | | பாலன மென்மொழியாள் | | பாவையொ டும்முடனே | | கோலம துருவாகிக் | | கூடலை யாற்றூரில் | | ஆலன்இவ் வழிபோந்த | | அதிசயம் அறியேனே. | | 9 |
இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு! கு-ரை: முதன்மையை, "முதல்" என்றே அருளினார். பொருள்கள் பலவாகலின் அவற்றது முதன்மைகளும் பலவாயின. இம் முதன்மைகளையுடைய தேவரை, "அதிதெய்வம்" என்ப. முதன்மைத் தேவர் பொருள்தோறும் உண்மையை, தொல்காப்பியத்து, "கால முலகம்" என்பது முதலிய மூன்று சூத்திரங்களானும் உணர்க. (சொல் - 57, 58, 59). "பேய்க்கணம்" என்றது, உலகத்துப் பேயினை. அவைதாமும் சில பயன்கருதி இறைவனை வழிபடும் என்க. "குறள் படை" என, ளகரந்திரியாது நின்றது, இசை நோக்கி. 9. பொ-ரை: கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து, பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமாதேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக்கொண்டு, திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு! கு-ரை: "வேலையின்" என்றதன்பின் 'எழுந்த' என்பதும், "உடன்" என்றதன்பின், 'ஆய' என்பதும், எஞ்சி நின்றன. 'உடன் ஏய்' கோலம் என ஓதுதல் சிறக்கும்.
|