871. | கூடலை யாற்றூரிற் | | கொடியிடை யவளோடும் | | ஆட லுகந்தானை | | அதிசயம் இதுவென்று | | நாடிய இன்றமிழால் | | நாவல வூரன்சொல் | | பாடல்கள் பத்தும்வல்லார் | | தம்வினை பற்றறுமே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: திருக்கூடலையாற்றூரில், கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும், அருள் விளையாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, 'அவன் செய்த இச்செயல் அதிசயம்' என்று சொல்லி, ஆராய்ந்த இனிய தமிழால், திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை, பற்றறக் கெடுதல் திண்ணம். கு-ரை: தம்பாற் செய்த திருவிளையாடலை நினைக்கின்றாராதலின், "ஆடல் உகந்தானை" என்று அருளிச்செய்தார். உகத்தல், அதனோடு இருத்தலை உணர்த்திற்று. 'என்று சொல் பாடல்கள்' என இயையும். ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | | கண்டவர் ககள் கூப்பித் | தொழுதுபின் தொடர்வார் காணார் | வண்டலர் கொன்றையாரை | வடியுடை மழுவொன் றேந்தி | அண்டர்தம் பெருமான் போந்த | அதிசயம் அறியேன் என்று | கொண்டெழு விருப்பினோடும் | கூடலை யாற்றூர் புக்கார். | 103 | - தி. 12 சேக்கிழார் |
|