பக்கம் எண் :

1165
 

86. திரு வன்பார்த்தான் பனங்காட்டூர்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருக்கச்சியனேகதங்காவதத்தைப் பணிந்து அருகில் உள்ள பதிகளை வணங்கிச் சின்னாள் தங்கி வன்பார்த்தான்பனங்காட்டூர் சென்று இறைஞ்சிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 194)


குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபெருமானை உணரமாட்டாதாரது நிலைமைக்கு இரங்கி அருளிச்செய்தது.

பண்: சீகாமரம்

பதிக எண்: 86

திருச்சிற்றம்பலம்

872.விடையின்மேல் வருவானை

வேதத்தின் பொருளானை

அடையில்அன் புடையானை

யாவர்க்கும் அறிவொண்ணா

மடையில்வா ளைகள்பாயும்

வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்

சடையிற்கங்கை தரித்தானைச்
சாராதார் சார்வென்னே.

1


1. பொ-ரை: இடபத்தின்மேல் ஏறி வருபவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும், தன்னை அடைந்தால், அங்ஙனம் அடைந்தார்மாட்டு, அன்புடையனாகின்றவனும் ஆகிய, நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற, யாவராலும் அறியவொண்ணாத, சடைமுடியின்கண் கங்கையைத் தாங்கியுள்ள பெருமானை அடையாதவரது அடைவுதான் என்னே!

கு-ரை: 'பிறவற்றை அடையும் அவர்தம் அடைவுகள், யாதொரு பயனையும் தாரா' என்றவாறு. சார்தல், எவற்றையேனும் தமக்குப் பயன்தரும் பொருளாக உணர்ந்து, அவற்றிற் பற்றுச் செய்தல். சிவபிரானையன்றி ஏனைய பொருள்கள் யாவும், என்றும் எவ் விடத்தும் நின்று பயன்தருவனவாகாமையே யன்றி, இடரையும்