பக்கம் எண் :

1166
 
873.அறையும்பைங் கழலார்ப்ப

அரவாட அனலேந்திப்

பிறையுங்கங் கையுஞ்சூடிப்

பெயர்ந்தாடும் பெருமானார்

பறையுஞ்சங் கொலியோவாப்

படிறன்றன் பனங்காட்டூர்

உறையுமெங் கள்பிரானை

உணராதார் உணர்வென்னே.

2



விளைப்பனவாதலையும், சிவபிரானது நிலைபேற்றினையும், அவனது பேரின்பத்தினையும் உணரமாட்டாதார், பிற பிற பொருள்களைத் தமக்குப் பயன் தருவனவாக உணர்ந்து, முன்னர்ச் சிலவற்றைப் பற்றிப் பின்னர் அவற்றை விடுத்து வேறு சிலவற்றைப் பற்றி, இவ்வாறே காலமெல்லாம் அலமந்து போதலை நினைந்து, 'இவர் பற்றும் பற்றுத்தான் என்னே' என இரங்கி அருளிச்செய்தார். 'இங்ஙனம் அவர் அலமருதற்குக் காரணம் அவரது அறியாமை யன்றி வேறில்லை' என்பது திருவுள்ளம். இவை, வருகின்ற திருப்பாடல்கள் எல்லா வற்றிற்கும் ஒக்கும். 'சார்பென்னே' என்பதும் பாடம்.

2. பொ-ரை: ஒலிக்கின்ற, பசிய பொன்னாலாகிய கழல்கள் கலிப்பவும், அணியப்பட்ட பாம்புகள் சுழன்று ஆடவும், கையில் நெருப்பை ஏந்தி, தலையில் பிறையையும் கங்கையையும் அணிந்து கொண்டு, அடிபெயர்ந்து நின்று நடனம் ஆடுகின்ற பெருமானாகிய, யாவராலும் அறியவொண்ணாமையிற் கள்வனாய், முழங்குகின்ற பறைகளும், சங்குகளும் ஒலித்தல் ஒழியாத, தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனை உணராதாரது உணர்வுதான் என்னே!

கு-ரை: "அறையும் பைங்கழல் ஆர்ப்ப" என்றருளிச் செய்தது போலவே, "ஆர்பறையும் சங்கு ஒலியோவா" என்று அருளிச் செய்தார் என்க. ஆர்பறை, ஆர்க்கும் - முழங்கும் பறை. "பெயர்ந்து" எனச் சினைவினை முதல்மேல் நின்றது, ஒரு பொருள் மேற் பலபெயர் வருவழிப் பெயர் தோறும் உருபு கொடுத்துக் கூறுதலும், இறுதிக்கண் மட்டுமே உருபு கொடுத்துக் கூறுதலும் ஆகிய இரண்டனுள், ஈண்டு, இறுதிக்கண் மட்டுமே உருபு கொடுத்து, 'பெருமான், படிறன், எங்கள் பிரானை உணராதார்' என்று அருளிச்செய்தார்.