பக்கம் எண் :

1167
 
874. தண்ணார்மா மதிசூடித்

தழல்போலுந் திருமேனிக்

கெண்ணார்நாண் மலர்கொண்டங்

கிசைந்தேத்து மடியார்கள்

பண்ணார்பா டலறாத

படிறன்றன் பனங்காட்டூர்

பெண்ணாணா யபிரானைப்

பேசாதார் பேச்சென்னே.

3

875.நெற்றிக்கண் ணுடையானை

நீறேறுந் திருமேனிக்

குற்றமில் குணத்தானைக்

கோணாதார் மனத்தானைப்

பற்றிப்பாம் பரையார்த்த

படிறன்றன் பனங்காட்டூர்ப்

பெற்றொன்றே றும்பிரானைப்

பேசாதார் பேச்சென்னே.

4


3. பொ-ரை: குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனை முடிமேற் சூடி, கள்வனாய், நெருப்புப்போலும் தனது திருமேனிக்கு உரியனவாக எண்ணுதல் பொருந்திய, அன்று மலர்ந்த மலர்களைக்கொண்டு, மனம் பொருந்தித் துதித்து வழிபடும் அடியார்களது பண்ணிறைந்த பாடலின் ஒலி நீங்காத, தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற, பெண்ணும் ஆணும் ஆய உருவத்தினனாகிய பெருமானைச் சொல்லாதவரது சொல்தான் என்னே!

கு-ரை: "திருமேனிக்கு" என்றதன்பின், 'உரியனவாக' என்பது எஞ்சி நின்றது. "ஏத்தும்" என்றது, 'ஏத்திவழிபடும்' எனப் பொருள் தந்தது. சொல்லுதல், பெயர் கூறுதலும் புகழ்தலும் முதலியனவாம்.

4. பொ-ரை: நெற்றியில் கண்ணை யுடையவனும், திருநீறு பொருந்திய திருமேனியை உடையவனும், குற்றம் இல்லாத இயல்பை யுடையவனும், கோடுதல் இல்லாதவரது மனத்தில் உள்ளவனும், பாம்பைப் பிடித்து அரையிற் கட்டிய கள்வனும் ஆகிய, தனது திரு