பக்கம் எண் :

1168
 
876.உரமென்னும் பொருளானை

உருகிலுள் ளுறைவானைச்

சிரமென்னுங் கலனானைச்

செங்கண்மால் விடையானை

வரமுன்னம்அருள்செய்வான்

வன்பார்த்தான்பனங்காட்டூர்ப்

பரமன்எங் கள்பிரானைப்

பரவாதார் பரவென்னே.

5


வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற, எருது ஒன்றின்மேல் ஏறுகின்ற கடவுளைச் சொல்லாதவரது சொல்தான் என்னே!

கு-ரை: 'பெற்றம்' என்பது கடைக்குறைந்து நின்றது. "ஒன்று" என்றது, 'ஒற்றை எருது பயன்படாது' என்னுங் குறிப்பினது.

5. பொ-ரை: 'ஞானம்' என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும், உள்ளம் அன்பால் உருகினால், அதன் கண் நீங்காது தங்குகின்றவனும், தலை ஓடாகிய உண்கலத்தை உடையவனும், சிவந்த கண்களை யுடைய பெரிய இடப வாகனத்தை உடையவனும், தன்னை வழிபடுவார் விரும்பும் வரத்தை விரைந்து அருளுபவனும், மேலானவனும் ஆகிய, திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே!

கு-ரை: 'உருகிலுள் இறைவானை' என்றதனை 'உள்ளம் உருகில் உடனாவார்' (தி. 2 ப. 111 பா. 3) என்பதனோடு வைத்து நோக்குக. இதனையே,

"உள்ளம் உருகில் உடனாவர் அல்லது
தெள்ள அரியரென் றுந்தீபற
சிற்பரச் செல்வரென் றுந்தீபற்"

- திருவுந்தியார் 7

என்று மெய்ந்நூல் கூறிற்று. பரவுதல் - முன்னிலையாகத் துதித்தல்.