877. | எயிலார்பொக் கம்மெரித்த | | எண்டோள்முக் கண்ணிறைவன் | | வெயிலாய்க்காற் றெனவீசி | | மின்னாய்த்தீ யெனநின்றான் | | மயிலார்சோ லைகள்சூழ்ந்த | | வன்பார்த்தான் பனங்காட்டூர்ப் | | பயில்வானுக் கடிமைக்கட் | | பயிலாதார் பயில்வென்னே. | | 6 |
878. | மெய்யன்வெண் பொடிபூசும் | | விகிர்தன்வே தமுதல்வன் | | கையின்மான் மழுவேந்திக் | | காலன்கா லம்மறுத்தான் | | பைகொள்பாம் பரையார்த்த | | படிறன்றன் பனங்காட்டூர் | | ஐயன்எங் கள்பிரானை | | அறியாதார் அறிவென்னே. | | 7 |
6. பொ-ரை: பொலிவு நிறைந்த சில மதில்களை எரித்தவனும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய கடவுளும், வெயிலாய்க் காய்ந்து, காற்றாய் வீசி, மின்னாய் மின்னி, தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய, மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் நீங்காதிருக்கும் பெருமானுக்குச் செய்யும் தொண்டிற் பயிலாதவரது பயிற்சிதான் என்னே! கு-ரை: 'பொக்கம் ஆர் எயில்' என மாற்றிப் பொருள் கொள்க. பொக்கம் - பொலிவு. இனி, "ஆர்" என்றதனைப் பலர்பால் ஈறாகவும், "பொக்கம்" என்றதனை, பொய் எனவுங் கொண்டு, 'பொக்கத்தார் எயில்' என வைத்து உரைத்தலுமாம். "காற்றென வீசி" என்றதனால், ஏனையவற்றிற்கும் அவ்வாறு உரைத்தல் திருவுள்ளமாயிற்று. 7. பொ-ரை: மெய்ப்பொருளாய் உள்ளவனும், வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற, வேறுபட்ட இயல்கினனும், வேதத்திற்குத் தலைவனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடைமுரிவித்தவனும், படத்தைக் கொண்ட பாம்பினை அரையின் கண் கட்டியுள்ள கள்வனும், யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திரு
|