பக்கம் எண் :

1170
 
879.வஞ்சமற்ற மனத்தாரை

மறவாத பிறப்பிலியைப்

பஞ்சிச்சீ றடியாளைப்

பாகம்வைத் துகந்தானை

மஞ்சுற்ற மணிமாட

வன்பார்த்தான் பனங்காட்டூர்

நெஞ்சத்தெங் கள்பிரானை

நினையாதார் நினைவென்னே.

8


வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!

கு-ரை: 'மெய்யின் வெண்பொடி பூசி' எனப் பாடம் ஓதுதலுமாம். 'காலன்' என்பது, 'காலத்திற்கு முதல்வன்' என்பதனால் வந்த காரணக்குறியாகலின், "காலன் காலம் அறுத்தான்" என்றது. 'காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன்' என்பதும், அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வனாயினமையும், சிவபிரானது ஆணையான் அன்றித் தானே ஆயினான் அல்லன்' என்பதும், 'அம்முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் ஒழுகினமையின், இடை முரிவிக்கப் பட்டான்' என்பதும், 'இதனான் எல்லாவற்றையும் தன் இச்சை வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே' என்பதும் உணர்த்தி யருளியவாறாயிற்று.

8. பொ-ரை: வஞ்சனையற்ற தூய மனம் உடையவரை என்றும் மறவாதவனும், பிறப்பில்லாதவனும், செம்பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை யுடையாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய, மேகங்கள் பொருந்திய, மணிகள் இழைத்த மாடங்களையுடைய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரிலும், எங்கள் நெஞ்சத்திலும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நினையாதவரது நினைவுதான் என்னே!

கு-ரை: "மறவாத" என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. 'வைத்து உகந்தானை' என்றதனை, 'உகந்து வைத்தானை' என மாற்றி உரைக்க.

இறைவனுக்கு அண்டத்தில் இடமாவது திருக்கோயிலும், பிண்டத்தில் இடமாவது அடியவர் நெஞ்சமும் என்பதனை,