880. | மழையானுந் திகழ்கின்ற | | மலரோனென் றிருவர்தாம் | | உழையாநின் றவருள்க | | உயர்வானத் துயர்வானைப் | | பழையானைப் பனங்காட்டூர் | | பதியாகத் திகழ்கின்ற | | குழைகாதற் கடிமைக்கட் | | குழையாதார் குழைவென்னே. | | 9 |
881. | பாரூரும் பனங்காட்டூர்ப் | | பவளத்தின் படியானைச் | | சீரூருந் திருவாரூர்ச் | | சிவன்பேர்சென் னியில்வைத்த |
"சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான்" (தி. 8 திருக்கோவையார் - 20) என்பதனானும் உணர்க. 9. பொ-ரை: மேகம்போலும் நிறத்தினனாகிய திருமாலும், மலரில் இருப்பவனாகிய பிரமனும் என்ற இருவரும் பணி செய்கின்றவராய் நினைந்து நிற்க, உயர்ந்த வானத்தினும் உயர்ந்து நிற்பவனும், எல்லாரினும் பழையவனும் ஆகிய, திரு வன்பார்த்தான் பனங்காட்டூரைத் தனது ஊராகக் கொண்டு விளங்குகின்ற, குழையணிந்த காதினையுடைய பெருமானுக்குத் தொண்டுபடுதலில் மனம் நெகிழாத வரது மனநெகிழ்ச்சிதான் என்னே! கு-ரை: 'உழையா நின்றவராய்' என, எச்சமாக்குக. "உயர்வானம்" என்றது, வானத்தினது இயல்பை விதந்தவாறு. அதனினும் உயர்தல், சிவலோகத்தில் விளங்குதல். 'குழைக் காதன்' என மிகற் பாலதாகிய ககர ஒற்று, தொகுத்தலாயிற்று. 10. பொ-ரை: தனது பெயர் நிலம் முழுதும் பரவிய திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற பவளம் போலும் உருவத்தையுடைய பெருமானை, புகழ்மிக்க திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது பெயரைத் தலையில்
|