| ஆரூரன் னடித்தொண்டன் | | அடியன்சொல் அடிநாய்சொல் | | ஊரூரன் உரைசெய்வார் | | உயர்வானத் துயர்வாரே. | | 10 |
திருச்சிற்றம்பலம் வைத்துள்ள, அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும் அடியவனாகிய, அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள், அவரவர் ஊரின்கண் உரைசெய்வாரும் சிவலோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர். கு-ரை: "திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த" என்றது, 'ஆரூரன்' எனப் பெயர்பெற்றதன் காரணத்தை விளக்கிய வாறு. அடியவர்தாம் பல திறத்தராகலின், "அடித்தொண்டன் அடியன்" என்று அருளினார். "நாய்" என்றது ஆகுபெயராய் உயர்திணை மேல் நின்றமையின், 'நாய்ச்சொல்' எனச் சகரம் மிகாதாயிற்று. 'ஊரான்' என்பது குறுகி நின்றது; அது வேற்றுமை மயக்கம். 'இத் தலத்தையடைந்து பாடுவோரேயன்றி, அவரவர் இடத்திருந்தே பாடுவோரும் பயன்பெறுவர்' என்றவாறு. "உரை செய்வார்" என்றதில், இழிவு சிறப்பும்மை தொகுத்தல். 'சொல்' என்னும் ஆகுபெயர் அடுத்து வந்தது. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | | செல்வம் மல்கு திருப்பனங்காட் | டூரில் செம்பொற் செழுஞ்சுடரை | அல்லல் அறுக்கும் அருமருந்தை | வணங்கி அன்பு பொழிகண்ணீர் | மல்க நின்று விடையின்மேல் | வருவா னெனும்வண் டமிழ்ப்பதிகம் | நல்ல இசையினுடன் பாடிப் | போந்து பிறவும் நண்ணுவார். | 194 | - தி. 12 சேககிழார் |
|