பக்கம் எண் :

1174
 
883. நாறு செங்கழு நீர்ம லர்

நல்ல மல்லிகை சண்ப கத்தொடு

சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூர்

நீறு பூசிநெய் யாடித் தம்மை

நினைப்பவர் தம்ம னத்த ராகிநின்

றாறு சூடவல்லா ரவ ரேய ழகியரே.

2

884.செங்கண் மேதிகள் சேடெ றிந்து

தடம்ப டிதலிற் சேலி னத்தொடு

பைங்காண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த்

திங்கள் சூடிய செல்வ னாரடி

யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில்

அங்கிருந் துறைவா ரவ ரேய ழகியரே.

3


2. பொ-ரை: மணம் வீசுகின்ற செங்கழுநீர் மலரையும், நல்ல மல்லிகை மலரையும், சண்பக மலரையும், சேறு செய்யப்பட்ட கழனியாகிய வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நீற்றைப் பூசி நெய்யில் மூழ்கி, தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவராய் நிற்பவரும், நீரை முடியில் தாங்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.

கு-ரை: மலர் என்றதன் ஈற்றுக் குற்றொற்றசையே, இசை வகையாற் சீராயிற்று. செங்கழுநீர் மலர், முதலியன, அவற்றையுடைய கொடி முதலியவற்றைக் குறித்தலின் ஒடுக்கொடுத்துப் பிரித்தருளினார். "சேறு செய் கழனி" என்றது, பழனத்தின் பொதுமை நீக்கிற்று. 'நெய்யாடிதன்னை' என்பதும், 'மனத்தனாகி' என்பதும் பாடம் அல்ல.

3. பொ-ரை: சிவந்த கண்களையுடைய எருமைகள், வயலைச் சேறாக்கிக் குளங்களில் சென்று வீழ்தலினால், அங்குள்ள கயல்மீனின் கூட்டமும், பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்களை யுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, சந்திரனைச் சூடிய செல்வனார், தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்க்கின்றவராகிவிடுவாராயின், அத்தலத்தில் நீங்காது தங்கி வாழ்கின்ற அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.'

கு-ரை: "தீர்ப்பராய் விடில்" என்ற செயினென் எச்சம், "நீரின்றமையா துலகெனின்" (குறள் - 20) என்றாற்போல, தெளிவுப்