பக்கம் எண் :

1175
 
885.வாளை பாய மலங்கி ளங்கயல்

வரிவ ராலுக ளுங்க ழனியுள்

பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த்

தோளும் ஆகமும் தோன்ற நட்டமிட்

டாடு வாரடித் தொண்டர் தங்களை

ஆளு மாறுவல்லா ரவ ரேய ழகியரே.

4


886.கொங்கை யார்பல ருங்கு டைந்ந்

தாட நீர்க்குவ ளைம லர்தரப்

பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர்

மங்கை பாகமும் மாலொர் பாகமுந்

தாமுடையவர் மான்ம ழுவினொ

டங்கைத் தீயுகப்பா ரவ ரேய ழகியரே.

5


பொருட்கண் வந்தது. இறைவரது திருமேனி யழகினை வியந்தருளிச் செய்வார், இடையே, அவரது திருவருள் அழகினையும் வியந்தருளிச் செய்தார் என்க.

4. பொ-ரை: வாளை மீன்கள் துள்ள, மலங்கும், இளமையான கயலும், வரிகளையுடைய வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கம் எங்கும், பாளையையுடைய கமுக மரங்கள் சூழ்ந்துள்ள திருப்பனையூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற, திரண்ட தோள்களும், அகன்ற மார்பும் பொலிவுற நடனத்தை அமைத்து ஆடுபவரும், தம் அடிக்குத் தொண்டராயுள்ளாரை ஆளுமாறு வல்லவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.

கு-ரை: "கமுகம்" என்றதில், அம் அல்வழிக்கண் வந்த சாரியை. "தோளும் ஆகமும் தோன்ற" என்ற விதப்பு, 'திரண்ட தோள்' அகன்ற ஆகம்' என்பவற்றைத் தோற்றுவித்தது. நட்டம் இட்டு ஆடுதல், நடன முறைப்படி ஆடுதல்.

5. பொ-ரை: மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால், குளத்து நீரில் குவளைப் பூக்கள் மலர, அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , உமையையுடைய ஒரு பாகத்தையும், திருமாலை உடைய