887. | காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர் | | தாம்ப ரவிய கருணை யங்கடற் | | பாவி ரிபுலவர் பயி லுந்தி ருப்பனையூர் | | மாவிரிமட நோக்கி அஞ்ச | | மதக ரியுரி போர்த்து கந்தவர் | | ஆவி லைந்துகப்பா ரவ ரேய ழகியரே. | | 6 |
ஒரு பாகத்தையும் உடையவரும், அகங்கையில், 'மான், மழு, தீ' என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். கு-ரை: "கொங்கையார்" என்றது, "மகளிர்" என்றவாறு. 'குளம்' என்பது, ஆற்றலான் வந்தது. 'ஓர்' என்றதனை, 'மங்கை' என்றதன் பின்னுங் கூட்டுக. மங்கை ஓர் பாகம் உடைமையும், மால் ஓர்பாகம் உடைமையும் வேறு வேறு நிலைகளாதலின், அவற்றை ஏற்ற பெற்றியான் உடையவர் எனக்கொள்க. மங்கையும், மாலும் இருத்தல் இடப்பாகம் ஒன்றிலே என்பதும் உணர்க. 'குடைந்ந் தாட', என, ஒற்றளபெடை கொள்க. 6. பொ-ரை: பக்கம் எங்கும் காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய், பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, மான் தோல்வியுறுகின்ற பார்வையை யுடையவளாகிய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பொருந்திய யானை யினது தோலை விரும்பிப் போர்த்தவரும், பசுவிற் றோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையார். கு-ரை: "கடல்" என்றதன் பின்னர், "ஆய்" என்பது வருவிக்க. கருணைக் கடலாய்' என்பதன் கருத்து, 'கடல்போலும் கருணையை உடையவராய்' என்பதாதல் வெளிப்படை. 'கருணையங்கடலப் பாவிரி' என்பது பாடம் அன்று. "பரவிய" என்றதற்குப்பின் உள்ள இப்பகுதி, சில பதிப்புக்களில் காணப்படவேயில்லை; அவைகளில் முதலடி, 'பரவிய' என்றே முடிகின்றது. 'மா இரி' எனப் பிரிக்க. 7. பொ-ரை: மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட, மண்டபம், மாடம், மாளிகை, கோபுரம் இவைகளின்மேல், தோல்
|