888. | மரங்கள் மேல்மயி லால மண்டப | | மாடமா ளிகை கோபு ரத்தின்மேல் | | திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த் துரங்கன் வாள்பிளந் தானுந் தூமலர்த் | | தோன்ற லும்மறி யாமை தோன்றிநின் | | றரங்கி லாடவல்லா ரவ ரேய ழகியரே. | | 7 | 889. | மண்ணி லாமுழ வம்ம திர்தர | | மாட மாளிகை கோபு ரத்தின்மேல் | | பண்ணி யாழ்முரலும் பழ னத்திரு ருப்பனையூர் | | வெண்ணி லாச்சடை மேவிய | | விண்ண வரொடு மண்ண வர்தொழ | | அண்ண லாகிநின்றா ரவ ரேய ழகியரே. | | 8 |
சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, குதிரை உருவங்கொண்டு வந்த, 'கேசி' என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும், தூய மலரின்கண் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று, மன்றில் நடனம் ஆட வல்லாராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். கு-ரை: பலா முதலிய பெரிய மரங்களின் கிளைகளில் நின்று மயில் ஆடுதல் உண்டு என்பதை இலக்கியங்களிலும் காணலாகும். "வலிமுகம்" என்பது குரங்கின் பெயர்களில் ஒன்றாதலின், 'வன்முகவன்' என்றார். "முகவன்" என்றதை, 'கடுவன், அலவன்' என்பனபோலக் கொள்க. திருமால் கண்ணனாய் இருந்த காலத்து, கேசி என்னும் அசுரனை அழித்த வரலாற்றை, பாகவதத்துட் காண்க. 'துரங்க வாய் பிளந்தானும்' என்பதும், 'அறியாமற்றோன்றி நின்று' என்பதும் பாடங்கள். "அறியாமை" என்றது, 'அறியாத தன்மை யுடையனாய்' என்னும் பொருளது. 8. பொ-ரை: மாடம், மாளிகை, கோபுரம் இவைகளில், மண் பொருந்திய மத்தளம் அதிர, யாழ்கள் பண்களை இசைக்கின்ற, நல்ல வயல்கள் சூழந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்தப்பட்ட, விண்ணவரும்
|