890. | குரக்கி னங்குதி கொள்ளத் தேனுகக் | | குண்டு தன்னயற் கெண்டை பாய்தரப் | | பரக்குந் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர் | | இரக்கம் இல்லவர் ஐந்தொ டைந்தலை | | தோளி ருபது தான்நெ ரிதர | | அரக்கனை யடர்த்தா ரவ ரேய ழகியரே. | | 9 |
கு-ரை: மத்தளத்திற் பூசப்படுகின்ற மண்ணினை, 'மார்ச்சனை' என்ப. 'மண்ணெலாம்' என்பது பாடம் அன்று. 'பண்ணியாழ்' என்பதில் உள்ள இகரம், சாரியை. இனி, 'பண்ணி' என வினை யெச்சமாகக்கொண்டு, 'யாழ் பண்ணப்பட்டு முரலும்' என்றும், 'பண்ணிய' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று எனக்கொண்டு, பண்ணப்பட்ட யாழ் இசையை முரலும், என்றும் உரைத்தலுமாம். 'சடை' என்றதன்பின், 'மீது' என்பதுபோல்வதொரு தேமாச் சீர்சொல் விடப்பட்டதுபோலும்! 9. பொ-ரை: குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும்படி குரங்கின் கூட்டம் குதிக்க, அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும் படி பரந்திருக்கின்ற, குளிர்ந்த வயல்களாகிய பழனத்தையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, இரக்கமில்லாதவராய், அரக்கனாகிய இராவணன், அவனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் நெரியும்படி, தமது காலால் நெருக்கியவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். கு-ரை: குண்டு - ஆழம்; அஃது அதனையுடைய குளத்தைக் குறித்தது. 'குண்டு தண்வயல்' என்னும் பாடம் சிறவாமை அறிக. 'தாளால்' என உருபு விரித்து, "அடர்த்தார்" என்றதன் முன்னர்க் கூட்டுக. 10. பொ-ரை: வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை
|