891. | வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர் | | மாத வர்வள ரும்வ ளர்பொழில் | | பஞ்சின் மெல்லடியார் பயி லுந்திருப் பனையூர் | | வஞ்சி யும்வளர் நாவ லூரன் | | வனப்ப கையவ ளப்பன் வன்றொண்டன் | | செஞ்சொற் கேட்டுகப்பா ரவ ரேய ழகியரே. | | 10 |
யுடைய உமையது பங்கை உடையவராய், பெரிய தவத்தவர்க்ள மிகுகின்ற, வளர்கின்ற சோலைகளையுடைய செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடிகளை யுடையவராகிய மகளிர், ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நொச்சியே யன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டனது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். கு-ரை: நொச்சி, வஞ்சி என்பவற்றை, தம் எயிலைக் காத்தல், பிறர் நாட்டின்மேற் சேறல் என்றானும், அக்காலங்களிற் சூடுதற்குரிய பூவைத்தரும் அம்மரவகைகள் என்றானும் கொள்க. இதனால் திருநாவலூரில் உள்ளாரது ஆண்மை குறித்தருளியவாறாம். இதனையும் ஏனைத் திருப்பாடல்கள் போலவே அருளிச்செய்தாராயினும், தமது திருபெயரைப் பெய்தருளிச் செய்தமையின், திருக்கடைக் காப்பெனவே கொள்க. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | செய்ய சடையார் திருப்பனையூர்ப் | புறத்துத் திருக்கூத்தொடும் காட்சி | எய்த வருள வெதிர்சென்றங் | கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி | ஐயர் தம்மை அரங்காட | வல்லா ரவரே யழகியரென் | றுய்ய வுலகு பெறும்பதிகம் | பாடி யருள்பெற் றுடன்போந்தார். | 53 | - தி. 12 சேக்கிழார் |
|