88. திருவீழிமிழலை பதிக வரலாறு: சுவாமிகள், திருநன்னிலத்துப் பெருங்கோயிலை வணங்கி, நடைக் காவணம், நடைப்பாவடை, மணித்தோரணம் முதலியவற்றால் அந்தணர்கள் எதிர்கொள்ள, திருவீழிமிழலை யடைந்து, வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம் (தி. 12 ஏயர்கோன். புரா. 59) இதில் திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் பெருமான் படிக்காசு வழங்கியதைக் குறித்திருத்தல் அறியத்தக்கது. குறிப்பு: இத்திருப்பதிகம் இறைவர் திருமால் முதலிய பலருக்கு அருள் புரிந்தமையைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் புலப்படுத்தி, தமக்கும் அருளுமாறு வேண்டி அருளிச்செய்தது. பண்: சீகாமரம் பதிக எண்: 88 திருச்சிற்றம்பலம் 892. | நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர் | | நான்ம றைக்கிட மாய வேள்வியுள் | | செம்பொ னேர்மடவா ரணி பெற்ற திருமிழலை | | உம்ப ரார்தொழு தேத்த மாமலை | | யாளொ டும்முட னேயு றைவிடம் | | அம்பொன் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. | | 1 |
1. பொ-ரை: அந்தணர்களது நான்கு வேதங்களுக்கு இடமாகிய வேள்வியினுள் உம்மை விரும்பி வழிபடுவோர்க்கு அருள் செய்கின்றவரே, செம்பொன்னால் இயன்ற பாவைபோலும் மகளிர் அழகுபெற்று விளங்குகின்ற திருமிழலையுள், நீர் உயர்ந்த மலைமகளோடு உடனாகித் தேவர்கள் தொழுது துதிக்க உறைகின்ற இடத்தை, அழகிய பொன்போலச் சிறந்த வீழி மரத்தின் நிழலாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்யீர். கு-ரை: 'நம்புதல்' என்றது நம்பி வழிபடுதலைக் குறித்தது "அருள் செய்யும்" என்ற எச்சம், "கொண்டீர்" என்ற வினைப் பெயரொடு முடிதலின், அதற்குக் கருத்து நோக்கி, இவ்வாறுரைக்கப்
|