893. | விடங்கொள் மாமிடற் றீர்வெள் ளைச்சுருள் | | ஒன்றிட்டு வட்ட காதி னீர்என்று | | திடங்கொள் சிந்தையினார் கலி காக்கும் திருமிழலை | | மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை | | வந்தி ழிச்சிய வான நாட்டையும் | | அடங்கல் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. | | 2 |
பட்டது. 'வேள்வியுள் நம்பினார்க்கு' என முன்னே கூட்டுக. "உள்" என்றது ஏழாம் வேற்றுமைப் பொருளைத் தரும் இடைச் சொல். "செம்பொன்", கருவியாகுபெயர். செல்வம் உடையராது செல்வச் சிறப்பு இனிது விளங்குதல் அவர்தம் மகளிரிடத்தே யாகலின், மிழலை நகரத்துச் செல்வச் சிறப்பை இனிது விளக்குதற்கு, மடவாரது அழகினை விதந்தருளிச் செய்தார். வீழி மரத்திற்குப் பொன் உவமையாயது, "பொன்போற் பொதிந்து" (குறள் 159.) என்றாற் போலச் சிறப்புப் பற்றி. "வீழி" என்றது அதன் நிழலை. 'நிழல்' என்பதும், அஃது உள்ள இடத்தையேயாம். வீழி மரமே இத்தலத்தின் மரமாதலும், அதனானே இது 'வீழிமிழலை' எனப்படுவதும் அறிக. "அடியேற்கும்" என்ற உம்மை எச்சத்தோடு இழிவு சிறப்பு. 2. பொ-ரை: 'நஞ்சினை உண்ட கரிய கண்டத்தை உடையவரே, வெண்மையான சங்கக் குழை ஒன்றினை இட்டுத் தூங்கவிட்ட காதினை உடையவரே' என்று போற்றி, உறுதி கொண்ட உள்ளத்தையுடைய அந்தணர்கள், உலகிற்கு வறுமை வாராமல் காக்கின்ற திருமிழலையுள் சிங்கங்கள் தாங்குகின்ற விமானம் ஒன்றை, உம்பொருட்டு மண்மேல் வந்து இறங்கச் செய்த வானுலகத்தையும் தன்கீழ் அடக்குதலையுடைய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்யீர், கு-ரை: "வெள்ளை", விடாத ஆகுபெயர். "சுருள்" என்றது குழையை, "கலிகாக்கும்" என்றதனால், "சிந்தையினார்", 'அந்தணர்' என்பது பெறப்பட்டது. "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார்" (தி. 1 ப. 8. பா. 1)
|