897. | எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் | | ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர் | | செறிந்த பூம்பொழில்தேன் துளிவீசுந் திருமிழலை | | நிறைந்த அந்தணர் நித்த நாள்தொறும் | | நேசத்தால் உமைப் பூசிக் கும்மிடம் | | அறிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. | | 6 |
898. | பணிந்த பார்த்தன் பகீர தன்பல | | பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர் | | திணிந்த மாடந்தொறுஞ் செல்வம் மல்கு திருமிழலைத் | | தணிந்த அந்தணர் சந்தி நாடொறும் | | அந்தி வானிடு பூச்சி றப்பவை | | அணிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. | | 7 |
கு-ரை: "ஏந்தி" என்றதன்பின் 'நின்று' என்பது எஞ்சி நின்றது. "திரி" முதனிலைத் தொழிற்பெயர். திரிதல் - வேறுபடுதல். செய்தல் - ஆக்குதல் 'வேறுபடுதலை ஆக்கிய' என்பது, 'வேறுபடுத்திய' என்னும் பொருளதாய். "மூன்றையும்" என்ற இரண்டாவதற்கு முடிபாயிற்று. "செய்" என்றது, "வீழிகொண்டீர்" என்றதனோடு இயையும், பரிசு - தன்மை; ஈண்டு, அன்பு. 6. பொ-ரை: மரங்கள் நெருங்கிய பூஞ்சோலைகள், தம்மிடத்து வருவோர்க்குத் தேன் துளிகளை வழங்குகின்ற திருமிழலையுள், நிறைந்துள்ள அந்தணர் பலரும் நாள்தோறும் நிலையாக அன்பினால் உம்மை வழிபடும் இடத்தை அறிந்து, வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, நீர், தந்தையது தாளை எறிந்த சண்டேசுர நாயனார், தமது கண்ணைப் பெயர்த்து அப்பிய கண்ணப்ப நாயனார் முதலாக, உம்மை வழிபட்ட அடியவர் பலருக்கு உயர்கதியைத் தந்தருளினீர்; அதுபோல அடியேனுக்கும் அருள்செய்யீர், கு-ரை: "எறிந்த, இடந்த" என்றவற்றிற்குச் செயப்படுபொருள் வருவிக்க, வீசுதல் - வழங்குதல், 'பொழிறேன்' என்பதன்றி 'பொழிற்றேன்' என்பது பாடமாயின், 'பொழிலின் கண் தேன்துளி வீசப்படும்' என உரைக்க, 'நித்தமாக' என, ஆக்கச் சொல் வருவிக்க. 7. பொ-ரை: நெருங்கிய மாடங்கள்தோறும் செல்வம் நிறைந்த திருமிழலையுள், சினம் தவிர்ந்த அந்தணர்கள், காலை, நடுப்பகல்
|