பக்கம் எண் :

1187
 
901.வேத வேதியர் வேத நீதிய

தோது வார்விரி நீர்மி ழலையுள்

ஆதி வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுகென்று
நாத கீதம்வண் டோது வார்பொழில்

நாவ லூரன்வன் றொண்டன் நற்றமிழ்

பாதம் ஓதவல்லார் பர னோடு கூடுவரே.

10

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: 'வேதத்தை ஓதுகின்ற வேதியர்களும், வேதத்தின் பொருளை விளங்குபவர்களும் வாழ்கின்ற, பரந்த நீரையுடைய திருமிழலையுள், பழைதாகிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்யீர்' என்று பாடிய, இனிய இசையை வண்டுகள் பாடுகின்ற நீண்ட சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றினவனும், வன்றொண்டனும் ஆகிய திருநாவலூல் தோன்றினவனும் ஆகிய நம்பியாரூரனது இந்நல்ல தமிழ்ப்பாடல்களை, அப்பெருமான் திருவடிக்கீழ் நின்றுபாட வல்லவர், அவனோடு இரண்டறக் கலப்பர்.

கு-ரை: "நீதியது" என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. "நீதியர்" என்பது பாடம் ஆகாமை யறிக. "ஆதி" என்றது, 'பழையது' என்னும் பொருளது, "என்று" என்றதன் பின், 'பாடிய' என்பது எஞ்சி நின்றது. "பரன்" எனப் பின்னர் வருகின்றமையின், "பாதம்" என, வாளா அருளினார். 'பாதத்தின் கண்' என, ஏழாவது விரிக்க.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

 
படங்கொள் அரவில் யில்வோனும்

பமத் தோனும் பரவரிய

விடங்கன் விண்ணோர் பெருமானை

விரவும் புளக முடன்பரவி

அடங்கல் வீழி கொண்டிருந்தீர்

அடியேனுக்கும் அருளுமெனத்

தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை

சாத்தி யங்குச் சாரும்நாள்.

59

- தி. 12 சேக்கிழார்