பக்கம் எண் :

1190
 
903.இடையறியேன் தலையறியேன்

எம்பெருமான் சரணம்என் பேன்

நடையுடையன் நம்மடியான்

என்றவற்றைப் பாராதே

விடையுடையான் விடநாகன்

வெண்ணீற்றன் புலியின்தோல்

உடையுடையான் எனையுடையான்

உளோம்போகீர் என்றானே.

2

904.செய்வினையொன் றறியாதேன்

திருவடியே சரணென்று

பொய்யடியேன் பிழைத்திடினும்

பொறுத்திடநீ வேண்டாவோ


உம் வழியிற் சென்மின்' என்றதாம். 'என்றானே' என்ற ஏகாரம் தேற்றம்.

2. பொ-ரை: யான் யாதொரு செயலிலும் 'முதல் இன்னது; நடு இன்னது; முடிவு இன்னது;' என்று அறியேன்; 'எம் பெருமானே எனக்குப் புகலிடம்; ஆவது ஆகுக' என்று கவலையற்றிருப்பேன்; அதனையறிந்திருந்தும், இடப வாகனத்தை யுடையவனும், விடம் பொருந்திய பாம்பை அணிந்தவனும், வெண்மையான நீற்றைப் பூசுபவனும், புலியின் தோலாகிய உடையை உடையவனும், என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன், 'இவன் நம்மையே அடைக்கலமாக அடைதலை யுடையவன்; நமக்கு அடியவன்' என்ற முறைமைகளை நினையாமலே, "உளோம் போகீர்" என்று சொன்னானன்றே; இதுவோ அவனது கண்ணோட்டம்!

கு-ரை: 'இடை, தலை' எனபவற்றை அருளினமையின், முதல் (அடி) என்பதும் கொள்ளப்பட்டது. தலை - முடி; முடிவு. "அடை" முதனிலைத் தொழிற்பெயர். சுவாமிகளை இறைவன் எவ்வாறு புறக்கணிப்பினும், அவர் அவனைப் பாடுதல் ஒழியாராகலின், "விடை யுடையான்" என்பது முதலியவற்றாற் புகழ்ந்தோதினார்.

3. பொ-ரை: படத்தையுடைய பாம்பை அணிந்தவனே, 'உனது திருவடியே புகல்' என்று கருதி, 'செய்யத்தக்க செயல் இது; தகாத செயல் இது' என்பதைச் சிறிதும் அறியாத பொய்யடியேனாகிய யான்,